இளஞ்சிவப்பு நிற பட்டு உடுத்தி காட்சி தரும் அத்திவரதர்...
பதிவு : ஜூலை 16, 2019, 11:50 AM
காஞ்சிபுரத்தின் புகழ்பெற்ற நிகழ்வுகளில் ஒன்று அத்திவரதர் உற்சவம்.
காஞ்சிபுரத்தின் புகழ்பெற்ற நிகழ்வுகளில் ஒன்று அத்திவரதர் உற்சவம். 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த உற்சவத்தில், வரதராஜ பெருமாள் கோவிலின் தெப்பக்குளத்தில் வைக்கப்படும் அத்திவரதர் சிலை வெளியில் எடுக்கப்பட்டு 48 நாட்களுக்கு பூஜை நடத்துவார்கள். 48 நாட்களுக்கு பின்னர் மீண்டும் சிலையை நீருக்கடியில் வைத்து விடுவார்கள். ஜூலை 1ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த உற்வத்தின் 16வது நாளான இன்று அத்திவரதர் இளஞ்சிவப்பு நிற பட்டு உடுத்தி காட்சி தந்து கொண்டிருக்கிறார். ஏலக்காய் மாலை, தாமரைப்பூ மாலை, செண்பகப்பூ மாலை உள்ளிட்டவை அணிவித்து, நெய்வேதியம் செய்து அதிகாலை 5 மணிக்கு அத்திவரதரின் நடை திறக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து முக்கிய பிரமுகர்களும், பொதுமக்களும் நீண்ட வரிசைகளில் காத்திருந்து சுவாமியை தரிசித்து வருகின்றனர். தமிழக அமைச்சர் பாஸ்கரன், திரைப்பட நடிகர் ராதாரவி ஆகியோர் அதிகாலையிலேயே சுவாமி தரிசனம் செய்து சென்றனர். நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில், 15வது நாளான நேற்று ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இந்த 15 நாட்களில் இதுவரை சுமார் 17 லட்சம் பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்து விட்டு சென்றுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

அத்திவரதருக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் மரியாதை - ரோஜா நிற பட்டு வஸ்திரம் அளிக்கப்பட்டது

காஞ்சிபுரம் அத்திவரதருக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பட்டு வஸ்திர மரியாதை அளிக்கப்பட்டது.

149 views

அத்திவரதர் உற்சவத்தின் 16வது நாள் : 15 நாட்களில் இதுவரை சுமார் 17 லட்சம் பேர் தரிசனம்

காஞ்சிபுரம் அத்திவரதர் உற்சவத்தின் 16வது நாளான இன்று, அத்திவரதர் இளஞ்சிவப்பு நிற பட்டு உடுத்தி காட்சி தந்து கொண்டிருக்கிறார்.

124 views

15வது நாளாக அருள்பாலிக்கும் அத்திவரதர் : நாளுக்கு நாள் அதிகரிக்கும் பக்தர்கள் எண்ணிக்கை

காஞ்சிபுரத்தில் 15 வது நாளாக அத்திவரதரை தரிசிக்க ஏராளமான மக்கள் வரிசையில் காத்து நிற்கின்றனர்.

110 views

பிற செய்திகள்

வாக்காளர் விவரங்களை சரிபார்க்க - வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

திண்டுக்கல் வத்தலக்குண்டு சாலையில் அரசு கல்லூரி மாணவிகள் திடீரென நடனமாடினர்.

19 views

ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தற்கொலை முயற்சி: "குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்" - நெல்லை மாவட்ட ஆட்சியர்

ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தற்கொலைக்கு முயலுபவர்கள் மீது, குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும் என்று நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் எச்சரித்துள்ளார்.

87 views

3 மாதத்தில் 16 கொலை சம்பவங்கள் - போலீசார் 5 பேர் அதிரடி இடமாற்றம்

தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் கொலை சம்பவங்கள் நிகழ்ந்து வரும் நிலையில், பணியில் கவனக்குறைவாக இருந்ததாக சிறப்பு உதவி ஆய்வாளர் உள்பட 5 போலீசார் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

86 views

மேற்கூரை ஓடுகள் உடைந்து சேதம் - அங்கன்வாடி மைய கட்டடத்தின் அவலம்

ஓமலூர் அடுத்த காடையாம்பட்டி அங்கன்வாடி மைய கட்டடத்தின் மேற்கூரைகள் உடைந்து சேதம் அடைந்து கிடப்பதால், குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

25 views

இனிவரும் அனைத்து தேர்தலிலும் அதிமுகவே வெற்றி பெறும் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் மட்டுமின்றி வருகின்ற அனைத்து தேர்தலிலும் இனி அதிமுகவே வெற்றி பெறும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

60 views

5 பவுன் நகை மற்றும் செல்போனை தவற விட்ட பெண் - சிடிவி உதவியுடன் மீட்டு ஒப்படைத்த போலீசார்

புதுச்சேரி அருகே பெண் தவறவிட்ட 5 பவுன் தங்க நகையை சிசிடிவி கேமரா உதவியுடன் போலீசார் மீட்டு ஒப்படைத்தனர்.

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.