ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் புனரமைப்பு குறித்த நூல் வெளியீடு - குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பங்கேற்பு
பதிவு : ஜூலை 13, 2019, 11:59 PM
எந்த மொழியையும் திணிக்கவும் கூடாது..எதிர்க்கவும் கூடாது என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்தார்.
இந்து சமய அறநிலைய வாரியம்,  இந்திய கலாச்சார தொன்மை அறக்கட்டளை, சென்னை வேணுகோபாலசுவாமி கைங்கரியம் அறக்கட்டளை ஆகியவை இணைந்து ஸ்ரீரங்கம் கோவிலை 16 மாதத்திற்குள் புனரமைத்திருந்தன.  கோவிலின் பாரம்பரியத்தை அதன் பழமை மாறாமல் எதிர்கால தலைமுறையினருக்கு தெரியப்படுத்தும் வகையில் கோவில் புனரமைக்கப்பட்டது .கோயில் புனரமைப்பு பணிக்காக ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் கலாச்சார பாரம்பரிய பாதுகாப்பு விருது வழங்கி யுனெஸ்கோ நிறுவனம் கௌரவம் செய்துள்ளது.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் புனரமைப்பு குறித்த நூல் வெளியீடு :

ஸ்ரீரங்கம் ரங்கநாதர்  கோவிலின் பாரம்பரியத்தை அதன் பழமை மாறாமல் புனரமைக்கப்பட்டது குறித்த நூல் வெளியீட்டு விழா சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது . அந்த புத்தகத்தை  குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வெளியிட்டார்.விழாவில் பேசிய குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு , நமது பாரம்பரியம், கலாச்சாரம், கோவில்களை இளைய சமுதாயத்தினர் பாதுகாத்திட வேண்டும் என்றார். ஒரு சிலர் தம்மை இந்து என சொல்லிக்கொள்வதில், தயக்கம் காட்டுவதாகவும், நாட்டில் 80 சதவிகிதம் இந்துக்கள் இருக்கும் போது தயங்குவது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.எந்த மொழியையும் திணிக்கவும் கூடாது, எதிர்க்கவும் கூடாது என்று கேட்டுக் கொண்ட அவர் , தாம் ஆங்கிலத்துக்கு எதிரானவன் அல்ல என்றார் . நேர்மையில்லாத வகையில் பணம் சம்பாதிப்பவர்களுக்கு சிறைகளை மோடி தயார் செய்து கொண்டிருப்பதாவும் அவர் குறிப்பிட்டார் . அரசியலில் குதிரை பேரம் நடப்பதாக வெங்கையா நாயுடு வேதனை தெரிவித்தார். 

ஆளுநர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்பு  :

புத்தகவெளியீட்டு விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், அமைச்சர்கள் ஜெயக்குமார், சேவூர் ராமச்சந்திரன், ஸ்ரீரங்கம் கோவில் அறங்காவலர் குழு தலைவரும், தொழிலதிபருமான வேணு சீனிவாசன் உட்பட பலர்  கலந்து கொண்டனர். 


தொடர்புடைய செய்திகள்

ரெங்கநாதர் கோயில் சேர்த்தி சேவை வைபவம் : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

ரெங்கநாதர் கோயிலில் ஊடலுக்கு பின் நம்பெருமாளையும் தாயாரையும் இணைக்கும் சேர்த்தி சேவை நடைபெற்றது

33 views

தேன் தமிழ் திவ்ய பிரபந்தம் - வைகோ உரை

திருச்சி ஸ்ரீரங்கத்தில் தேன் தமிழ் திவ்ய பிரபந்தம் என்கிற தலைப்பில் நடைபெற்ற இலக்கிய கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டு உரையாற்றினார்.

147 views

பிற செய்திகள்

ராஜகோபாலை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க கோரிய வழக்கு - சிகிச்சை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சரவணபவன் ராஜகோபாலை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க கோரிய வழக்கில் அவருக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

37 views

ரயில்வே மேம்பாலத்தை பராமரிக்க நீதிமன்றம் உத்தரவு

தஞ்சை சாந்தப்பிள்ளை ரயில்வே கேட் மேம்பாலத்தை ஆய்வு செய்து பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

20 views

2 பேருடன் திரும்பிச் சென்ற இலங்கை படகு - கஞ்சா கடத்தல் கும்பலா என போலீசார் விசாரணை

தாரண்யம் கடல் பகுதியில் படகில் இருந்து இறங்கி நீந்திவந்த இலங்கை நபரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

10 views

தாய்லாந்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றிய ஏஜெண்ட் - ஏஜெண்ட் மீது நடவடிக்கை எடுக்குமாறு பெண் போராட்டம்

தாய்லாந்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்த ஏஜெண்ட் மீது நடவடிக்கை எடுக்குமாறு திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டார்.

6 views

தாய்லாந்தில் தவித்த 2 மகன்கள் - போராடி மீட்ட தாய்

தாய்லாந்தில் வேலை வாங்கி தருவதாக கூறி, பண மோசடி செய்த ஏஜெண்ட் மீது நடவடிக்கை எடுக்குமாறு திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில், பெண் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டார்.

29 views

தீபாவளி சீட்டு நடத்தி ரூ.30 லட்சம் மோசடி - ஒருவர் கைது

விழுப்புரம் அருகே தீபாவளிச் சீட்டு நடத்தி 30 லட்சம் ரூபாய் மோசடி செய்தது தொடர்பான புகாரில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.