நிறுத்தப்பட்ட காரில் இருந்து ரூ.2.10 லட்சம் திருட்டு : பணம் கிடைத்த மகிழ்ச்சியில் துள்ளி குதித்து சென்ற திருடன்
பதிவு : ஜூலை 13, 2019, 02:47 PM
தாராபுரம் அருகே நிறுத்தப்பட்ட காரில் இருந்து 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாயை திருடி விட்டு, மகிழ்ச்சியில் திருடன் துள்ளி குதித்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
தாராபுரம் அருகே நிறுத்தப்பட்ட காரில் இருந்து 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாயை திருடி விட்டு, மகிழ்ச்சியில் திருடன் துள்ளி குதித்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. சண்முக சுந்தரம் என்பவர் வங்கியில் இருந்து எடுத்த 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாயை காரில் வைத்து விட்டு, குண்டம் பகுதி கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்று திரும்பியுள்ளார். அப்போது, காரில் இருந்த பணம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், போலீசில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார் சிசிடிவி காட்சியை ஆய்வு செய்ததில், திருடன் காரில் இருந்து பணத்தை எடுத்து கொண்டு, மகிழ்ச்சியில் துள்ளி குதித்து சென்றது தெரிய வந்தது. இந்நிலையில் போலீசார் இது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

1522 views

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

7253 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4818 views

பிற செய்திகள்

உள்ளாட்சி தேர்தலுக்கு மீண்டும் கால அவகாசமா? - ஸ்டாலின் கண்டனம்

உள்ளாட்சி தேர்தலுக்கு மீண்டும், மீண்டும் கால அவகாசம் கோரும் தமிழக முதலமைச்சர் மற்றும் மாநில தேர்தல் ஆணையரிடம், ஆளுநர் விளக்கம் கேட்க வேண்டும் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

7 views

நெல்லையப்பர் கோயில் ஆனி பெருந்திருவிழா : தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் நிறைவு

நெல்லையப்பர் கோயிலில் 45 நாட்கள் நடைபெற்ற ஆனிப் பெருந்திருவிழா தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் நிறைவு பெற்றது.

8 views

திண்டுக்கல் : ஸ்ரீ அஞ்சலி வரத ஆஞ்சநேயர் திருக்கோயில் விழா

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியில் 12 அடி உயரமுள்ள ஸ்ரீ அஞ்சலி வரத ஆஞ்சநேயர் திருக்கோயில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு, சுவாமி வஜ்ர அங்கி ஸேவையில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

23 views

ரூ.18 லட்சம் கையாடல் புகார் : ஆவின் மேலாளர் பணியிடை நீக்கம்

திண்டுக்கல் ஆவின் பாலக மேலாளர் 18 லட்சம் ரூபாய் கையாடல் செய்தததாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

25 views

ராஜகோபாலை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க கோரிய வழக்கு - சிகிச்சை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சரவணபவன் ராஜகோபாலை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க கோரிய வழக்கில் அவருக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

51 views

ரயில்வே மேம்பாலத்தை பராமரிக்க நீதிமன்றம் உத்தரவு

தஞ்சை சாந்தப்பிள்ளை ரயில்வே கேட் மேம்பாலத்தை ஆய்வு செய்து பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

35 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.