ஹெல்மெட் அணியாத அ.தி.மு.க. பிரமுகர் : போக்குவரத்து போலீசாரிடம் வாக்குவாதம்
பதிவு : ஜூலை 13, 2019, 11:58 AM
சென்னையில் ஹெல்மெட் அணியாத கட்சி பிரமுகர் போக்குவரத்து போலீசாரிடம் மிரட்டும் தோணியில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் ஹெல்மெட் அணியாத கட்சி பிரமுகர் போக்குவரத்து போலீசாரிடம் மிரட்டும் தோணியில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஜெமினி பாலத்திற்கு கீழே போக்குவரத்து போலீசார் ஹெல்மெட் அணியாதவர்களை பிடித்து அபராதம் விதித்து வந்துள்ளனர். அப்போது ஹெல்மெட் அணியாமல் வந்த அதிமுக பிரமுகர் ஒருவர் ஓட்டுனர் உரிமத்தை காட்ட முடியாது எனவும், அபராதத்திற்கான சலானை பெறாமலும், போக்குவரத்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து போக்குவரத்து போலீசார் அதிமுக பிரமுகரின் வாகனத்தை பறிமுதல் செய்ததுடன்,  வழக்கும் பதிவு செய்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

990 views

பிற செய்திகள்

சொத்துக்களை பறித்த மகள்கள் - மீட்டு ஒப்படைத்த கோட்டாட்சியர்...

மதுரை அருகே முதியோர் இல்லத்தில் பெற்றோரை விட்டதால் 2 மகளிடமிருந்து சொத்துக்களை மீட்டு வயதான தம்பதியினரிடம் கோட்டாட்சியர் ஒப்படைத்தார்.

14 views

பாலாற்றில் உள்ள தடுப்பணைகளை உயர்த்தும் ஆந்திர அரசை எச்சரிக்க வேண்டும் - ராமதாஸ்

பாலாற்றின் குறுக்கே சட்டவிரோதமாக 21 தடுப்பணைகளை கட்டியுள்ள ஆந்திர அரசு, இப்போது அவற்றின் உயரத்தை அதிகரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

19 views

பாலாற்றில் உள்ள அணைகளை உயர்த்தும் ஆந்திர அரசு : தடுத்து நிறுத்த தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை

பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்ணையை உயர்த்தும் பணியில் ஆந்திர அரசு ஈடுபட்டுள்ளதால் திருவண்ணாமலை உள்ளிட்ட 5 மாவட்டங்கள் பாலைவனம் ஆகும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

11 views

கடலூர், நாகையில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி...

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கத்தின் சார்பில் பல ஊர்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

12 views

கஜா புயல் - மறியலில் ஈடுபட்ட 140 பேர் மீதான வழக்கு ரத்து : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கஜா புயலின் போது நிவாரணம் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டதாக 140 பேர் மீது தொடரப்பட்ட வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.

11 views

தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் நியமனத்திற்கு, உயர்நீதிமன்றம் விதித்த தடை நீக்கம் - உச்சநீதிமன்றம்

தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் நியமனத்திற்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை விதித்த இடைக்கால தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.