தொடர் மடிக்கணினிகள் திருட்டு - இளைஞர் கைது
பதிவு : ஜூலை 13, 2019, 11:04 AM
புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தில் பயணிகளை திசைதிருப்பி தொடர் லேப்டாப் திருட்டில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தில் பயணிகளை திசைதிருப்பி தொடர் லேப்டாப் திருட்டில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர். சென்னை ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் கிருஷ்ணகுமார், லேப்டாப்பை பேருந்து இருக்கையில் வைத்து, கீழே இறங்கியுள்ளார். சிறிது நேரம் கழிந்து வந்து பார்த்த போது, அவரது லேப் டாக் காணாமல் போய் இருந்தது. இதே போன்று, மேலும் இருவரும் தங்களது லேப்டாப்களை காணவில்லை என்று தேடிக்கொண்டு இருந்தனர். இதனை அடுத்து மூன்றுபேரும் சேர்ந்து பேருந்துநிலையம் முழுவதும் தேடியதில் சந்திக்கப்படும்படியாக நின்றுகொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரித்ததில் அவர்தான் லேப்டாப்பை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து அந்த நபரை 3 பேரும் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் அவர் திருச்சியை சேர்ந்த செந்தில் என்று தெரியவந்தது. அவரிடமிருந்து 6 லட்சம் மதிப்பிலான 19 லேப்டாப்கள் பறிமுதல் செய்யப்பட்டது.  

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

1046 views

பிற செய்திகள்

புதுச்சேரியில் வேம்படி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

புதுச்சேரியில் உள்ள பிரசித்தி பெற்ற வேம்படி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

8 views

சித்தூர் அருகே அரசு பேருந்து - கார் நேருக்கு நேர் மோதல் - சென்னையை சேர்ந்த 4 பேர் பலி

ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே அரசு பேருந்தும் காரும் மோதிக்கொண்ட விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.

43 views

குமாரசாமி ஆட்சி கவிழ்ந்தது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி - எடியூரப்பா

கர்நாடகாவில் குமாரசாமி ஆட்சி கவிழ்ந்தது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என்று அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

34 views

ஆட்சிதுவக்கம் முதல் குதிரை பேரத்தை துவக்கி விட்டது பாஜக - குமாரசாமி

கர்நாடகாவில் கூட்டணி ஆட்சி துவங்கிய நாளில் இருந்தே குதிரை பேரத்தை பாஜக துவக்கி விட்டதாக அம் மாநில முதலமைச்சர் குமாரசாமி குற்றஞ்சாட்டினார்.

14 views

விழ்ந்தது குமாரசாமி ஆட்சி : நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி

கர்நாடக சட்டப்பேரவையில் மாலையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வி அடைந்தது.

57 views

"அமெரிக்க அதிபருடன் பேசியது என்ன ?" - நாட்டு மக்களுக்கு விளக்கிட ராகுல்காந்தி கோரிக்கை

இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவி வரும் காஷ்மீர் பிரச்னையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் தலையிட வேண்டும் என, பிரதமர் மோடி கேட்டு கொண்டிருப்பது உண்மையானால் அது மக்களை ஏமாற்றும் செயல் என, ராகுல்காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்

80 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.