50-க்கும் மேற்பட்ட கோயில்களில் திருடிய கும்பல் : ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் கைது
பதிவு : ஜூலை 13, 2019, 09:16 AM
50-க்கும் மேற்பட்ட கோவில்களில் திருடி வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் கொண்ட கும்பலை ஆந்திர போலீசார் கைது செய்தனர்.
ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா ஆகிய மூன்று மாநிலங்களில் கோவில்களை குறிவைத்து, கும்பல் ஒன்று திருடியுள்ளது. இதுகுறித்து செகந்திராபாத் காவல் நிலைய ஆய்வாளர் சந்திரபாபு தலைமையில் தனிப்படை அமைத்து சி.சி.டி.வி. கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் ஒரு கும்பல் கோவில்கள் உள்ள இடங்களை கண்காணித்து திருடி வந்தது தெரியவந்தது. இதையடுத்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேரை  போலீசார் கைது செய்தனர்.மேலும் அவர்களிடமிருந்து 3 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கோயில் உண்டியலில் பணம் போடுவது போல் பகலில் வந்து நோட்டமிட்டு, இரவில் வந்து திருடியது போலீசார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

736 views

பிற செய்திகள்

ஒடிசாவில் 'ரசகுல்லா தினம்' - ருசிக்க குவிந்த மக்கள்

பார்க்கும் போதே சுவைக்க தூண்டும் தின்பண்டங்களில் ரசகுல்லாவிற்கென தனி இடம் உண்டு...

21 views

கோவில் பூசாரி உள்பட 3 பேர் நரபலி? - கோவில் முழுவதும் ர‌த்த‌த்தை தெளித்து சென்ற கொடூரம்

ஆந்திராவில், 3 பேர் தலை வெட்டி நரபலி கொடுக்கப்பட்டதாக, பொது மக்களிடையே அச்சம் பரவியுள்ளது.

590 views

பாதுகாப்பு கேட்ட பாஜக எம்.எல்.ஏ.வின் மகள் : நீதிமன்றத்தில் வைத்து தாக்கப்பட்டதால் பரபரப்பு

அலகாபாத் நீதிமன்றத்தில் பாதுகாப்பு கேட்டு வந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ ராஜேஷ் மிஷ்ராவின் மகள் சாக்‌ஷி மற்றும் அவரது கணவர் அஜிதேஷ் மீது சிலர் தாக்குதல் நடத்தினர்

96 views

ஸ்ட்ரெச்சர் வழங்காமல் இழுத்தடித்த நேரத்தில் சாலை ஓரத்திலேயே பெண் ஒருவருக்கு பிரசவம்

உத்தரபிரதேசம் மாநிலம் மகோபாவில் ஸ்ட்ரெச்சர் வழங்காமல் இழுத்தடித்த நேரத்தில் சாலை ஓரத்திலேயே பெண் ஒருவருக்கு பிரசவம் நடைபெற்றது.

8 views

மும்பை அருகே 10 வயது சிறுமி பலாத்காரம் - செக்யூரிட்டிக்கு சரமாரி அடிஉதை

மும்பை அருகே விரார் பகுதியில் செக்யூரிட்டி பணியில் இருந்த நபர் அந்தப் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார்.

13 views

புதிய கல்விக் கொள்கை தொடர்பான வரைவு அறிக்கை : பொதுமக்களின் கருத்துகளை கேட்ட பிறகே இறுதி முடிவு - மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால்

புதிய கல்விக் கொள்கை தொடர்பான வரைவு அறிக்கையில் பொதுமக்களின் கருத்துகளை கேட்ட பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும் என்று மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்தார்.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.