விமானநிலையம் வழியாக கடத்தல் அதிகரிப்பு - கடத்தல்காரர்களை பிடிக்கும் சுங்கத்துறை அதிகாரிகள்
பதிவு : ஜூலை 13, 2019, 05:31 AM
சென்னை விமான நிலையத்தில் நடப்பாண்டில் மட்டும் 270 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை விமான நிலையம் தெற்காசியாவிலேயே முக்கியமான விமான நிலையமாக செயல்பட்டு வருகிறது. தினந்தோறும், சுமார் 35 பன்னாட்டு விமானங்கள் இங்கு வந்து செல்கின்றன.நாளொன்றுக்கு சுமார் 65 ஆயிரம் பயணிகள் வந்து செல்லும் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் போன்று, கடத்தல்காரர்கள் பலரும் வந்து செல்கின்றனர். இதேபோல துறைமுகங்கள் வழியாகவும் கடத்தல் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இத்தகைய கடத்தல்காரர்களை கண் கொத்தி பாம்பாக கண்காணித்து வருகின்றனர் சுங்கத்துறை அதிகாரிகள்.2017- 18 மற்றும் 2018- 19ம் ஆண்டு விமான நிலையம் மற்றும் துறைமுகங்களில் பறிமுதல் செய்யப்பட்ட கடத்தல் பொருட்கள் மற்றும்  வழக்கு விவரங்களை சுங்கத்துறை வெளியிட்டுள்ளது.2017- 18ம் ஆண்டில் சென்னையில் இருந்து வெளிநாடு, வெளிநாட்டில் இருந்து சென்னை என கடத்தப்பட்ட சுமார் 161 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள், இதுதொடர்பாக 361 வழக்குகளை பதிவு செய்துள்ளனர். இதேபோல, 6 கோடி ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்து, 76 வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.தடை செய்யப்பட்ட போதை பொருட்கள், செம்மரக்கட்டைகள், வன உயிரினங்கள் என 3 கோடி ரூபாய் மதிப்பிலான கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், இதுதொடர்பாக161 வழக்குகளை பதிந்துள்ளனர்.இதே ஆண்டில் மொத்தமாக, விமான நிலையம், துறைமுகங்கள் என 552 கடத்தல் வழக்குகளை பதிவு செய்து, 56 கோடி ரூபாய் மதிப்புள்ள கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், கடத்தல் ஆசாமிகள் 74 பேரை சிறைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.தங்கம் கடத்துவது கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சுமார் 46 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ள சுங்கத்துறையினர், தற்போது வரை 87 கோடி ரூபாய் மதிப்பிலான 270 கிலோ கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக 461 வழக்குகளையும் பதிவு செய்துள்ளனர்.இதேபோல, வெளிநாட்டு பணம் கடத்தலும், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 48 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக கூறும் சுங்கத்துறை அதிகாரிகள், கடத்த முயன்ற 9 கோடி ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்து, இதுதொடர்பாக 100 வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.இதுமட்டுமின்றி, 4 கோடி ரூபாய் மதிப்பிலான கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்து, 215 வழக்குகளையும் அவர்கள் பதிவு செய்துள்ளனர். 2018-19ல் மட்டும் மொத்தமாக 776 கடத்தல் வழக்குகளை பதிவு செய்துள்ள சுங்கத்துறையினர், 77 கடத்தல்காரர்களை கைது செய்து, அவர்களிடம் இருந்து 100 கோடி ரூபாய் மதிப்பிலான கடத்தல் பொருட்கள், தங்கம், ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.இதில் சஹாரா பாலைவனத்தில் மட்டும் காணப்படும் அரிய வகை கொம்பு வகை பாம்புகளை பறிமுதல் செய்து வனத்துறையிடம் ஒப்படைத்த சுங்கத்துறையினர், 8 லட்ச ரூபாய் மதிப்பிலான அரிய வகை சுறா மீன்களின் துடுப்புகள், சிறுத்தை குட்டி ஆகியவற்றை கடத்த முயன்ற கும்பலையும் கைது செய்தனர்.சென்னை துறைமுகத்தில் இருந்து வெளிநாட்டுக்கு கடத்தப்படவிருந்த 19 டன் செம்மர கட்டைகள், 20 கிலோ குங்குமப்பூ ஆகியவற்றை பறிமுதல் செய்ததுடன், கடத்தல் கும்பலையும் கைது செய்தனர்.திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால், திருட்டை ஒழிக்க முடியாது என்ற பாடல் வரிகள் இருந்தாலும், இது போன்ற திருட்டு, கடத்தலை சுங்கத்துறை அதிகாரிகள் சிறப்பாக தடுத்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் ரூ.20 லட்சம் மதிப்பிலான தங்கம் கடத்தல்

சென்னை விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

22 views

"விமான நிலையங்களை மேம்படுத்த ரூ.25,000 கோடி" - மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் தகவல்

தமிழக விமான நிலையங்கள் உள்பட பல்வேறு முக்கிய நகரங்களின் விமான நிலையங்களை தரம் உயர்த்த, மத்திய அரசு, 25 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.

36 views

பிற செய்திகள்

சந்திரகிரகணம் - காண திரண்ட மக்கள் : பிர்லா கோளரங்கில் சிறப்பு ஏற்பாடு

சந்திரகிரகணத்தை ஒட்டி, சென்னை பிர்லா கோளரங்களில் சந்திரகிரகண காட்சிகளைக் காண ஏராளமானோர் திரண்டுள்ளனர்.

44 views

ராஜகோபால் தனியார் மருத்துவமனை​யில் அனுமதி - வடபழனி தனியார் மருத்துவமனையில் ராஜகோபாலுக்கு சிகிச்சை

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சரவண பவன் உரிமையாளர் ராஜகோபால் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

10 views

"குழந்தையை கடத்தியதற்கான காரணம் தெரியவில்லை" - முருகன், டி.எஸ்.பி.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மாயமான 3 வயது குழந்தை, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

40 views

"தமிழக அரசால் நீட் தேர்வுக்கு விலக்கு பெற முடியவில்லை - "டி.டி.வி.தினகரன்

மத்திய அரசோடு சுமூக உறவு வைத்திருப்பதாக கூறும் தமிழக அரசால் நீட் தேர்வுக்கு விலக்கு பெற முடியவில்லை என்று அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

12 views

வனப்பகுதியில் இருந்து வழிதவறி சென்ற பெண் புள்ளிமான் - மானை மீட்டு சிகிச்சை அளித்து வரும் வனத்துறை

கோபிசெட்டிபாளையம் பகுதியில் கம்பிவேலியில் சிக்கித்தவித்த பெண் புள்ளி மானை வனத்துறையினர் மீட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

14 views

"நீட் மசோதா விவகாரத்தில் தமிழக அரசு நாடகம்" - வைகோ, மதிமுக பொதுச் செயலாளர்

நீட் விவகாரத்தில், தமிழக அரசு நாடகம் ஆடுவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.