கரும்புலி குட்டிகளை 24 மணிநேரம் நேரலையில் பார்க்க நடவடிக்கை
பதிவு : ஜூலை 13, 2019, 04:51 AM
சென்னையை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள கரும்புலி குட்டிகளை இணைய தளம் மூலம் 24 மணி நேரமும் நேரலையில் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னையை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள கரும்புலி குட்டிகளை இணைய தளம் மூலம் 24 மணி நேரமும் நேரலையில் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வண்டலுார் உயிரியல் பூங்காவில், அரிதான மற்றும் அழியும் நிலையில் உள்ள, விலங்குகளான கரும் புலிக்குட்டிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றை, உலகின் எந்த இடத்தில் இருந்தும் பார்வையாளர்கள், இணையதளம் வாயிலாக, காணும் வகையில், புதிய வசதியை பூங்கா அதிகாரிகள் ஏற்படுத்தியுள்ளனர்.பூங்கா இணைய தளமான,  www.aazp.in ல் 24 மணிநேரமும், இவற்றின் நடவடிக்கைகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிற செய்திகள்

பாலாற்றில் உள்ள தடுப்பணைகளை உயர்த்தும் ஆந்திர அரசை எச்சரிக்க வேண்டும் - ராமதாஸ்

பாலாற்றின் குறுக்கே சட்டவிரோதமாக 21 தடுப்பணைகளை கட்டியுள்ள ஆந்திர அரசு, இப்போது அவற்றின் உயரத்தை அதிகரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

9 views

பாலாற்றில் உள்ள அணைகளை உயர்த்தும் ஆந்திர அரசு : தடுத்து நிறுத்த தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை

பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்ணையை உயர்த்தும் பணியில் ஆந்திர அரசு ஈடுபட்டுள்ளதால் திருவண்ணாமலை உள்ளிட்ட 5 மாவட்டங்கள் பாலைவனம் ஆகும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

6 views

கடலூர், நாகையில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி...

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கத்தின் சார்பில் பல ஊர்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

9 views

கஜா புயல் - மறியலில் ஈடுபட்ட 140 பேர் மீதான வழக்கு ரத்து : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கஜா புயலின் போது நிவாரணம் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டதாக 140 பேர் மீது தொடரப்பட்ட வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.

10 views

தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் நியமனத்திற்கு, உயர்நீதிமன்றம் விதித்த தடை நீக்கம் - உச்சநீதிமன்றம்

தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் நியமனத்திற்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை விதித்த இடைக்கால தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

16 views

பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

35 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.