கேமரா பதிவை வைத்து ஹெல்மெட் அணியாதவர்கள் மீது நடவடிக்கை - அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
பதிவு : ஜூலை 13, 2019, 02:55 AM
ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகள் மீது எடுத்த நடவடிக்கைகளை அறிக்கையாக தாக்கல் செய்ய போக்குவரத்து காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்த கோரி ராஜேந்திரன் தாக்கல் செய்த வழக்கு  நீதிபதிகள் மணிகுமார் மற்றும் சுப்ரமணியம் பிரசாத் அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் கண்காணிப்பு கேமரா பதிவுகள் கொண்டு  சாலை விதிகளை மீறியவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. சாலை விதிகளை மீறியவர்களின் வீட்டிற்கே அபராத ரசிதை அனுப்பும் திட்டம் சென்னை அண்ணாநகரில் நடைமுறைப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதை கேட்ட நீதிபதிகள், இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் உடன்  பயணிப்பவர்கள் மீதும் வழக்கு  பதிவு செய்ய உத்தரவிட்டதுடன், வீட்டிற்கு அபராத ரசீது அனுப்பும் நடைமுறையை அனைத்து பகுதிகளிலும் செயல்படுத்த உத்தரவிட்டனர். மேலும் கேமரா காட்சிகளை கொண்டு  காவல்துறை எடுத்த நடவடிக்கைகளை அறிக்கையாக தாக்கல் செய்ய  உத்தரவிட்டு வழக்கை ஜூலை 16-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

ஹெல்மெட் விதிமீறல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத காவல் துறையினர் மீது நடவடிக்கை - உயர்நீதிமன்றம்

ஹெல்மெட் விதிமீறல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க காவல் ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

45 views

பிற செய்திகள்

வருமான வரித் தாக்கல் செய்ய கடைசி தேதி ஜூலை 31 - வருமான வரி ஆணையர் என்.ரங்கராஜ்

தனிநபர்கள் ஜூலை 31 ஆம் தேதிக்குள் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் என வருமான வரித்துறை ஆணையர் ரங்கராஜ் கூறியுள்ளார்.

3 views

பொறியியல் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு குறைந்துள்ளது - அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர்

பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வில், இதுவரை 48 ஆயிரத்து 850 இடங்கள் நிரம்பியுள்ள நிலையில், இன்னும் ஒரு லட்சத்து 25 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளன.

4 views

சொத்துக்களை பறித்த மகள்கள் - மீட்டு ஒப்படைத்த கோட்டாட்சியர்...

மதுரை அருகே முதியோர் இல்லத்தில் பெற்றோரை விட்டதால் 2 மகளிடமிருந்து சொத்துக்களை மீட்டு வயதான தம்பதியினரிடம் கோட்டாட்சியர் ஒப்படைத்தார்.

31 views

பாலாற்றில் உள்ள தடுப்பணைகளை உயர்த்தும் ஆந்திர அரசை எச்சரிக்க வேண்டும் - ராமதாஸ்

பாலாற்றின் குறுக்கே சட்டவிரோதமாக 21 தடுப்பணைகளை கட்டியுள்ள ஆந்திர அரசு, இப்போது அவற்றின் உயரத்தை அதிகரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

20 views

பாலாற்றில் உள்ள அணைகளை உயர்த்தும் ஆந்திர அரசு : தடுத்து நிறுத்த தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை

பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்ணையை உயர்த்தும் பணியில் ஆந்திர அரசு ஈடுபட்டுள்ளதால் திருவண்ணாமலை உள்ளிட்ட 5 மாவட்டங்கள் பாலைவனம் ஆகும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

11 views

கடலூர், நாகையில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி...

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கத்தின் சார்பில் பல ஊர்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.