மீஞ்சூரில் நடந்து சென்ற பெண்ணிடம் தாலிச்செயின் பறிக்க முயற்சி - கல்லூரி மாணவர்களுக்கு சரமாரி அடி
பதிவு : ஜூலை 13, 2019, 01:49 AM
மீஞ்சூரில் நடந்து சென்ற பெண்ணிடம், 5 சவரன் தாலி சங்கிலியை பறிக்க முயன்ற இரு கல்லூரி மாணவர்களை பொதுமக்களே அடித்துப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் நடந்து சென்ற  பெண்ணிடம், 5 சவரன் தாலி சங்கிலியை பறிக்க  முயன்ற இரு கல்லூரி மாணவர்களை  பொதுமக்களே அடித்துப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். ரமணா நகர் பகுதியில் தெய்வானை என்பவர் தமது குழந்தையை பள்ளியில் இருந்து அழைத்து வருவதற்கு நடந்து சென்றார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேர், தாலி சங்கிலியை பறிக்க முயன்றனர். அப்போது தெய்வானை கூச்சலிட்டதால், சுற்றி இருந்தவர்கள் இரு நபர்களையும் பிடித்து அடித்து உதைத்தனர். மீஞ்சூர் போலீசார், விசாரணை நடத்தியதில், அவர்களது பெயர் மணிகண்டன் மற்றும் பிரசாந்த் என்பதும் இருவரும் தனியார் கல்லூரி மாணவர்கள் என்பதும் தெரிய வந்தது.செலவிற்காக இருவரும், சங்கிலி பறிப்பில் ஈடுபட்டதும் வெளிச்சத்திற்கு வந்தது.பொதுமக்கள் இரண்டு மாணவர்களை விரட்டிவிரட்டி தாக்கும் காட்சி வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பேக்கரியின் கூரையை உடைத்து பணம், தங்கக்காசு கொள்ளை

புதுச்சேரியில் பேக்கரியின் மேற்கூரையை உடைத்து, 5லட்சத்து 80 ஆயிரம் பணம் மற்றும் தங்க காசுகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

61 views

மூதாட்டிகளை குறிவைத்து திருடும் பெண் கும்பல் கைது

மூதாட்டிகளை குறிவைத்து நகைகளை திருடி வந்த மதுரையைச் சேர்ந்த பெண் கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

148 views

பிற செய்திகள்

கிருஷ்ணகிரி அருகே சுமார் 2,500 ஆண்டு பழமையான கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு

கிருஷ்ணகிரி அருகே சுமார் 2 ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமையான கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

29 views

ஸ்டெர்லைட் ஆலையை மூட துப்பாக்கி சூடு காரணமா? - மாசு கட்டுப்பாட்டு வாரியம் திட்டவட்டமாக மறுப்பு

துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு பின் ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டதாக கூறுவது தவறு என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

19 views

காவல்துறையினர் வரதட்சணை வாங்கக் கூடாது - டி.ஜி. பி. ஜே.கே. திரிபாதி

காவல்துறையினர் பரிசுப் பொருட்கள் மற்றும் வரதட்சணை வாங்கக் கூடாது என டி.ஜி. பி. ஜே.கே. திரிபாதி சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.

20 views

ஆர்.டி.ஐ சட்டத் திருத்த மசோதா தகவல் அறியும் உரிமையை நீர்த்துப் போகச் செய்யும் - டி.டி.வி.தினகரன்

ஆர்.டி.ஐ சட்டத் திருத்த மசோதா தகவல் அறியும் உரிமையை நீர்த்துப் போகச் செய்யும் என்று டி.டி.வி.தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

14 views

முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை - திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்

தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி அவரது கணவர் உள்ளிட்ட மூன்று பேர் படுகொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

45 views

சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் - பூங்கோதை

நெல்லையில் வீட்டில் இருந்த திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட 3 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.