திருமங்கலம் அரசு மருத்துவமனையில் மாலை 3 மணிக்கு மேல் மருத்துவர்கள் இல்லை - அரசு மருத்துவமனை மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்
பதிவு : ஜூலை 13, 2019, 01:27 AM
திருமங்கலம் அரசு மருத்துவமனையில் பிறக்கும் ஆண் குழந்தைக்கு 5 ஆயிரம் ரூபாய், பெண் குழந்தைக்கு 2 ஆயிரம் ரூபாய் என அடாவடி வசூல் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருமங்கலத்தை சுற்றியுள்ள, கள்ளிக்குடி கல்லுப்பட்டி ,பேரையூர் உள்ளிட்ட பல கிராம மக்கள், திருமங்கலம் அரசு மருத்துவமனையை நம்பியே உள்ளனர். தினம் தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்லும் இந்த மருத்துவமனையில், மாலை 3 மணிக்கு மேல் மருத்துவர்கள் இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட நாள்களாக உள்ளது. இது தவிர, டயாலிசிஸ் இயந்திரம் அமைக்கப்பட்டும், பணயாளர் நியமிக்கப்படவில்லை, அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் இல்லை,  ஸ்கேன் செய்யும் கருவிகள் இல்லை, இ.சி.ஜி. இயந்திரம் பழுது, சுகாதார பணியாளர் பற்றக்குறை என அடுக்கடுக்கான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளன. தற்போது, மேலும் ஒரு பகிரங்க குற்றச்சாட்டாக, இந்த மருத்துவமனையில் பிறக்கும் ஆண் குழந்தைக்கு 5 ஆயிரம் ரூபாயும், பெண் குழந்தைக்கு 2 ஆயிரம் ரூபாயும் லஞ்சமாக பெறப்படுவதாக கர்ப்பிணி பெண்கள் தெரிவிக்கின்றனர்.இத்தனை குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி இருக்கும் திருமங்கலம் அரசு மருத்துவமனை மீது, அரசு தனி கவனம் செலுத்திட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

சுடுகாட்டிற்கு செல்லும் பாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பதாக கூறி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

திருமங்கலத்தில் சுடுகாட்டிற்கு செல்லும் பாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பதாக கூறி கிராம மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

17 views

மதுரை திருமங்கலம் அருகே வீட்டில் கஞ்சா பதுக்கல் - 3 பேர் கைது

ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து பதுக்கி வைத்துள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது

79 views

பன்றிக்காய்ச்சலுக்கு 3 பேர் உயிரிழப்பு

பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 3 பேர் உயிரிழந்தனர்.

212 views

பிற செய்திகள்

உள்ளாட்சி தேர்தலுக்கு மீண்டும் கால அவகாசமா? - ஸ்டாலின் கண்டனம்

உள்ளாட்சி தேர்தலுக்கு மீண்டும், மீண்டும் கால அவகாசம் கோரும் தமிழக முதலமைச்சர் மற்றும் மாநில தேர்தல் ஆணையரிடம், ஆளுநர் விளக்கம் கேட்க வேண்டும் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

0 views

நெல்லையப்பர் கோயில் ஆனி பெருந்திருவிழா : தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் நிறைவு

நெல்லையப்பர் கோயிலில் 45 நாட்கள் நடைபெற்ற ஆனிப் பெருந்திருவிழா தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் நிறைவு பெற்றது.

8 views

திண்டுக்கல் : ஸ்ரீ அஞ்சலி வரத ஆஞ்சநேயர் திருக்கோயில் விழா

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியில் 12 அடி உயரமுள்ள ஸ்ரீ அஞ்சலி வரத ஆஞ்சநேயர் திருக்கோயில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு, சுவாமி வஜ்ர அங்கி ஸேவையில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

19 views

ரூ.18 லட்சம் கையாடல் புகார் : ஆவின் மேலாளர் பணியிடை நீக்கம்

திண்டுக்கல் ஆவின் பாலக மேலாளர் 18 லட்சம் ரூபாய் கையாடல் செய்தததாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

19 views

ராஜகோபாலை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க கோரிய வழக்கு - சிகிச்சை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சரவணபவன் ராஜகோபாலை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க கோரிய வழக்கில் அவருக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

50 views

ரயில்வே மேம்பாலத்தை பராமரிக்க நீதிமன்றம் உத்தரவு

தஞ்சை சாந்தப்பிள்ளை ரயில்வே கேட் மேம்பாலத்தை ஆய்வு செய்து பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

35 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.