ஆடி மாத பிறப்பை வரவேற்கும் விதமாக கடலில் குளித்து மகிழ்ந்த பொது மக்கள்
பதிவு : ஜூலை 13, 2019, 01:15 AM
கூடங்குளம் மாதா கோவில் திருவிழா மற்றும் ஆடி மாத பிறப்பை வரவேற்கும் விதமாக ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் கடலில் நீராடி மகிழ்ந்தனர்.
நெல்லை மாவட்டம் கூடங்குளம் மாதா கோவில் திருவிழா மற்றும் ஆடி மாத பிறப்பை வரவேற்கும் விதமாக ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் கடலில் நீராடி மகிழ்ந்தனர்.கூடங்குளம் அணுமின் நிலையம் அருகில் உள்ள கடற்கரையில் குவிந்த,  சிறுவர்களும், பெரியவர்களும், கொண்டு வந்த உணவை உட்கொண்டும் , கடற்கரையில் விளையாடியும் மகிழ்ந்தனர். மத நல்லிணக்கத்தை, எடுத்துக் காட்டும் விதமாக, இந்த கடல் குளிப்பு நிகழ்ச்சி இருந்ததாக,பொது மக்கள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்க வலுக்கும் எதிர்ப்பு

கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கும் மத்திய அரசின் முடிவிற்கு எதிர்ப்பு வலுத்துள்ளது.

40 views

மாணவியை துடைப்பத்தால் அடித்த ஆசிரியர் : 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

நெல்லையில் மாணவியை துடைப்பத்தால் அடித்ததாக ஆசிரியர் மீது போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

233 views

கைதிகளை ஜாதி பெயர் சொல்லி அழைப்பதாக எழுந்த புகார்...

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதிகளை ஜாதி வாரியாக பிரித்து தனி கட்டிடங்களில் வைத்திருப்பதாக வெளியான செய்தியை தொடர்ந்து, மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்கு பதிவு செய்தது.

408 views

பிற செய்திகள்

உள்ளாட்சி தேர்தலுக்கு மீண்டும் கால அவகாசமா? - ஸ்டாலின் கண்டனம்

உள்ளாட்சி தேர்தலுக்கு மீண்டும், மீண்டும் கால அவகாசம் கோரும் தமிழக முதலமைச்சர் மற்றும் மாநில தேர்தல் ஆணையரிடம், ஆளுநர் விளக்கம் கேட்க வேண்டும் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

4 views

நெல்லையப்பர் கோயில் ஆனி பெருந்திருவிழா : தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் நிறைவு

நெல்லையப்பர் கோயிலில் 45 நாட்கள் நடைபெற்ற ஆனிப் பெருந்திருவிழா தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் நிறைவு பெற்றது.

8 views

திண்டுக்கல் : ஸ்ரீ அஞ்சலி வரத ஆஞ்சநேயர் திருக்கோயில் விழா

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியில் 12 அடி உயரமுள்ள ஸ்ரீ அஞ்சலி வரத ஆஞ்சநேயர் திருக்கோயில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு, சுவாமி வஜ்ர அங்கி ஸேவையில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

22 views

ரூ.18 லட்சம் கையாடல் புகார் : ஆவின் மேலாளர் பணியிடை நீக்கம்

திண்டுக்கல் ஆவின் பாலக மேலாளர் 18 லட்சம் ரூபாய் கையாடல் செய்தததாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

21 views

ராஜகோபாலை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க கோரிய வழக்கு - சிகிச்சை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சரவணபவன் ராஜகோபாலை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க கோரிய வழக்கில் அவருக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

50 views

ரயில்வே மேம்பாலத்தை பராமரிக்க நீதிமன்றம் உத்தரவு

தஞ்சை சாந்தப்பிள்ளை ரயில்வே கேட் மேம்பாலத்தை ஆய்வு செய்து பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

35 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.