ரூ.1.5 கோடி சொத்தை எழுதி வாங்கி கொண்டு பெற்றோரை வீதிக்கு அனுப்பிய மகன்...
பதிவு : ஜூலை 12, 2019, 03:30 PM
புதுச்சேரியில் ஒன்றரை கோடி ரூபாய் சொத்தை எழுதி வாங்கிய மகன், பெற்றோரை வீதிக்கு அனுப்பிய பெரும் சோகம் அரங்கேறியுள்ளது.
புதுச்சேரி வழுதாவூர் சாலையை சேர்ந்த கூலித் தொழிலாளியான சங்கரதாஸ், தாம் சிறுக சிறுக சேமித்த பணத்தில், கனவு வீடு ஒன்று கட்டியுள்ளார். மகள் திருமணம் முடித்து கணவன் வீட்டுக்கு சென்ற நிலையில், மகனுக்கும் காதல் திருமணம் செய்து வைத்துவிட்டு அவர்களுடன் வாழ்ந்து வந்தார். ஆனால், பெற்ற மகனே சொந்த வீட்டில் இருந்து விரட்டியதால், மனைவியுடன்  சங்கரதாஸ் வீதிவீதியாக அலைந்துள்ளார். ஐ.டி.ஐ. படித்த மகன் ராஜ்மோகன், தொழில் தொடங்க லோன் வாங்க வேண்டும், அதற்கு, வீட்டை தமது பெயரில் மாற்றித் தர வேண்டும் என்று தந்தை சங்கரதாஸிடம் கேட்டுள்ளார். இதில், உருகிய சங்கரதாஸ், யாருக்கும் தெரியாமல், மகன் பெயருக்கு சொத்தை மாற்றிக் கொடுத்துள்ளார். சிறிது காலத்தில், மகன் வீட்டை விட்டு துரத்திவிட்டார். அடுத்து நடந்ததெல்லாம் யாருக்கும் நேரக்கூடாத சோகம்...

மகள் வீட்டுக்கு சென்ற தாய், தந்தை, போதிய வருமானம் இல்லாத வீட்டில் சுமையாக இருக்க விரும்பாமல் வெளியேறியுள்ளனர்.  உடல் நலம் பாதிக்கப்பட்ட மனைவியின் துன்பம் சகியாத சங்கரதாஸ், வழக்கறிஞர் ஒருவரை அணுகி, மகன் சொத்து எழுதி வாங்கியது பற்றி கூறியுள்ளார். வழக்கறிஞர் உதவியுடன் தமது சொத்தை மீட்டுத் தரக்கோரி முதியோர் பராமரிப்பு தீர்வு நடுவர் தீர்ப்பாயத்தில் சங்கரதாஸ் புகார் செய்தார். இதைத் தொடர்ந்து, ராஜ்மோகனை அழைத்த தீர்ப்பாய நடுவர், பெற்றோரை பாதுகாக்குமாறு கூறியுள்ளார். இதை, ராஜ்மோகன் ஏற்க மறுத்த நிலையில், அவரது பெயரில் இருந்த 1614 சதுர அடி பரப்பிலான வீட்டு பத்திரத்தை ரத்து செய்த தீர்ப்பாயம், சொத்தை சங்கரதாசுக்கு திருப்பித் தர உத்தரவிட்டது. இந்த உத்தரவு நகலை, சங்கரதாஸிடம் அளித்த சப்-கலெக்டர் சுதாகர், சார் பதிவாளர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கும் உத்தரவு நகலை அனுப்பி வைத்தார். போற்றி வளர்த்த பெற்றோரிடம், சொத்தை பறித்துக் கொண்டு வீதிக்கு அனுப்பிய மகனுக்கு, தீர்ப்பாயம் புகட்டிய பாடம் யாவரும் உணர வேண்டியது.

தொடர்புடைய செய்திகள்

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

8039 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4893 views

பிற செய்திகள்

அம்ராபாலி குழுமத்தின் அனைத்து நிறுவனங்களின் பதிவுகளும் ரத்து : உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா அமர்வு அதிரடி

அம்ராபாலி குழுமத்தின் அனைத்து நிறுவனங்களின் பதிவையும் ரத்து செய்ய உச்சநீதிமன்றம் நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

8 views

சந்திரயான்-2 விஞ்ஞானிகளுக்கு விருதுகள் வழங்க வேண்டும் - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

சந்திரயான்-2 விஞ்ஞானிகளுக்கு விருதுகள் வழங்க பிரதமரிடம் பரிந்துரை செய்யப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

11 views

காஷ்மீர் தொடர்பான அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து : நாடாளுமன்றத்தில் பிரதமர் விளக்கம் அளிக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை

காஷ்மீர் விவகாரம் தொடர்பான அமெரிக்க அதிபரின் கருத்துக்கு பிரதமர் விளக்கம் அளிக்க கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

11 views

கர்நாடக சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு : சபாநாயகருக்கு அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் கடிதம்

கர்நாடக சட்டசபையில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க 4 வாரங்கள் கால அவகாசம் கேட்டு அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 13 பேரும் சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

38 views

நவி மும்பையில் வேகமாக வந்த கார் மோதி 2 பேர் பலி - 4 பேர் படுகாயம்

நவி மும்பையில் கார் மோதிய பயங்கர விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். அதிவேகமாக வந்த கார் ஒன்று சாலையில் நடந்து சென்றவர்கள் மீதும், இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் மீதும் மோதியது.

98 views

காஷ்மீர் விவகாரத்தில் டிரம்ப் சமரச தூதுவரா..?

காஷ்மீர் விவகாரத்தில் சமரச தூதுவராக செயல்படுமாறு அமெரிக்க அதிபரிடம் பிரதமர் மோடி கோரிக்கை வைக்கவில்லை என இந்தியா தெரிவித்துள்ளது.

27 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.