அரசு பள்ளியில் சேர்க்கை மறுக்கப்பட்ட மாணவன் - தலைமை ஆசிரியரோடு பெற்றோர் வாக்குவாதம்
பதிவு : ஜூலை 12, 2019, 06:31 AM
அரசுப் பள்ளியில் மாணவனை சேர்க்க மறுத்ததால் தலைமை ஆசிரியருடன் பெற்றோர் வாக்கு வாதம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
கோவை மாவட்டம், ஒண்டிபுதூர் பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.  இங்கு பாப்பம்பட்டி பகுதியை சேர்ந்த கணேஷ்பாபு என்பவர், தமது மகன் ஸ்ரீராமை சேர்க்க வந்துள்ளார். ஸ்ரீராம் முன்னர் படித்த அரசு பள்ளியில் வழங்கிய மாற்றுச்சான்றிதழில் பத்தாம் வகுப்பு இடைநிறுத்தம் எனவும், படித்தது  ஒன்பதாம் வகுப்பு என்றும் இருந்ததால், பள்ளியில் சேர்ப்பதில் தலைமையாசிரியர் ரவீந்திரன், உதவி தலைமையாசிரியர் சிவக்குமார் ஆகியோர் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஆசிரியர்கள் தம்மை தாக்கியதாக கணேஷ்பாபு சமூக வலைதளங்களில் வெளியிட்ட  வீடியோ வேகமாக பரவியது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட மாவட்ட கல்வி அதிகாரி , ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும், மாணவனை இடையர்பாளையம் அரசு பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறினார்

தொடர்புடைய செய்திகள்

பள்ளிப்பாடப்புத்தகத்தில் உள்ள தேசிய கீதத்தில் பிழை... ஆசிரியர்கள், மாணவர்கள் கடும் அதிர்ச்சி

பள்ளிப் பாடப்புத்தகத்தில், தேசிய கீதம் பாடல் பிழையுடன் அச்சாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

726 views

தனியார் பள்ளிகளில் இலவச ஒதுக்கீடு : குலுக்கல் முறையில் மாணவர்கள் இன்று தேர்வு

தனியார் பள்ளிகளில் இலவச ஒதுக்கீட்டில் சேர குலுக்கல் முறையிலான மாணவர்கள் தேர்வு இன்று நடைபெறுகிறது.

171 views

பிற செய்திகள்

திண்டுக்கல் : ஸ்ரீ அஞ்சலி வரத ஆஞ்சநேயர் திருக்கோயில் விழா

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியில் 12 அடி உயரமுள்ள ஸ்ரீ அஞ்சலி வரத ஆஞ்சநேயர் திருக்கோயில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு, சுவாமி வஜ்ர அங்கி ஸேவையில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

8 views

ரூ.18 லட்சம் கையாடல் புகார் : ஆவின் மேலாளர் பணியிடை நீக்கம்

திண்டுக்கல் ஆவின் பாலக மேலாளர் 18 லட்சம் ரூபாய் கையாடல் செய்தததாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

9 views

ராஜகோபாலை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க கோரிய வழக்கு - சிகிச்சை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சரவணபவன் ராஜகோபாலை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க கோரிய வழக்கில் அவருக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

47 views

ரயில்வே மேம்பாலத்தை பராமரிக்க நீதிமன்றம் உத்தரவு

தஞ்சை சாந்தப்பிள்ளை ரயில்வே கேட் மேம்பாலத்தை ஆய்வு செய்து பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

29 views

2 பேருடன் திரும்பிச் சென்ற இலங்கை படகு - கஞ்சா கடத்தல் கும்பலா என போலீசார் விசாரணை

தாரண்யம் கடல் பகுதியில் படகில் இருந்து இறங்கி நீந்திவந்த இலங்கை நபரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

12 views

தாய்லாந்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றிய ஏஜெண்ட் - ஏஜெண்ட் மீது நடவடிக்கை எடுக்குமாறு பெண் போராட்டம்

தாய்லாந்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்த ஏஜெண்ட் மீது நடவடிக்கை எடுக்குமாறு திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டார்.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.