குடிசை மாற்று வாரியத்துக்காக இடிக்கப்பட்ட வீடுகள் - தற்கொலை செய்து கொள்ள போவதாக பெண்கள் குமுறல்
பதிவு : ஜூலை 12, 2019, 06:10 AM
குடிசை மாற்று வாரியத்துக்காக வீடுகள் இடிக்கப்பட்ட நிலையில், மாற்று இடம் வழங்காததால் தங்கும் இடம் இல்லாமல் அவதிப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், மணலி புதுநகரில், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் 11 மாடி குடியிருப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்காக அருகில் இருந்த அம்பேத்கர் நகர் குடியிருப்பில் 25 க்கும் மேற்பட்ட குடிசை மற்றும் ஓட்டு வீடுகள் கடந்த மாதம்12 ஆம் தேதி அகற்றப்பட்டது.  அகற்றப்பட்ட வீடுகளுக்கு மாற்று ஏற்பாடு செய்வதாக, அதிகாரிகள் கூறிய நிலையில், தற்போதுவரை மாற்று இடம் வழங்கவில்லை என்றும், வீடுகளை இழந்தவர்கள் கடந்த ஒரு மாதமாக கோவிலில் தங்கி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் , கடந்த 1 மாதமாக கூலி வேலைக்குகூட செல்ல முடியாமல், உணவின்றி தவித்து வருவதாக கூறும் மக்கள், அதிகாரிகள் உடனடியாக மாற்று இடம் வழங்கவில்லை என்றால், தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என, வேதனையோடு கூறினார்

பிற செய்திகள்

15வது நாளாக அருள்பாலிக்கும் அத்திவரதர் : நாளுக்கு நாள் அதிகரிக்கும் பக்தர்கள் எண்ணிக்கை

காஞ்சிபுரத்தில் 15 வது நாளாக அத்திவரதரை தரிசிக்க ஏராளமான மக்கள் வரிசையில் காத்து நிற்கின்றனர்.

52 views

4 வயது சிறுமி பாலியல் வன்முறை செய்யப்பட்டு கொலை : ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 3 இளைஞர்கள் கைது

திருவள்ளூர் அருகே 4 வயது சிறுமி பாலியல் வன்முறை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

94 views

சென்னையில் பட்டப்பகலில் 2 ரவுடிகள் வெட்டி படுகொலை...

சென்னையில் பட்டப்பகலில் 2 ரவுடிகள் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

214 views

மனு அளிக்க வேப்பிலை மாலை, பானையுடன் வருகை : கடலூர் ஆட்சியரகத்தில் இந்து மக்கள் கட்சியினரால் பரபரப்பு

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க, வேப்பிலை மாலை அணிந்து, கஞ்சி பானையுடன் வந்த இந்து மக்கள் கட்சி நிர்வாகிகளால் பரபரப்பு ஏற்பட்டது.

19 views

சவூதி அரேபியாவில் கொத்தடிமையாக கணவர் : மீட்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் பெண் மனு

நெல்லை மாவட்டம் தென்காசி அணைக்கரை தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம்.

28 views

புத்தக வாசிப்பை வலியுறுத்தி மாணவிகள் பேரணி : 700 மாணவிகள் ஒரே இடத்தில் புத்தகம் வாசித்து அசத்தல்

காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு ஒசூரில், புத்தக வாசிப்பை வலியுறுத்தி பேரணியும், 700 மாணவிகள் ஒரே இடத்தில் அமர்ந்து புத்தகங்களை வாசித்தும் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

23 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.