காதலியை தீர்த்துக்கட்ட சயனைடு வாங்கிய காதலன் - 1 மாத‌த்திற்கு பிறகு காதலன் கைது
பதிவு : ஜூலை 12, 2019, 05:33 AM
ஆன்லைன் மூலம் சயனைடு வாங்கி காதலிக்கு கொடுத்து மயக்க நிலையில் இருந்தவரை துப்பாட்டாவால் கழுத்தை நெறித்து கொன்ற காதலன் ஒரு மாத‌த்திற்கு பின் கைது செய்யப்பட்டுள்ளான்.
சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்த சுமர் சிங், காஜல் ஆகியோர் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.ஆனால் அவர்களது காதலை ஏற்காத காஜலின் பெற்றோர், அவருக்கு, வேறொரு நபருடன் நிச்சயதார்த்தம் செய்துள்ளனர். இந்த நிலையில், கடந்த மாதம் 10 ஆம் தேதி சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில்,காஜல் சயனைடு குப்பிகளை சாப்பிட்ட நிலையில், பிணமாக மீட்கப்பட்டார். அவரது காதலன் சுமர்சிங், உயிருக்கு ஆபத்தான நிலையில், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்திருந்த போலீசார், விசாரணைணையை தொடர்ந்து வந்தனர்.மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த காதலனிடம் விசாரித்த போது, அவர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்துள்ளார்.இந்த நிலையில், காஜலின் பிரேத பரிசோதனை அறிக்கையில், அவர் கழுத்தை நெறித்து கொல்லப்பட்டது தெரிய வந்தது. இதனால் சுமர்சிங்கிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில், மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.அதன்படி, காஜலுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டதால், அவர், தன் காதலன் சுமர்சிங்குடன் சேர்ந்து தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார். ஆனால், சுமர் சிங்கிற்கு தற்கொலை செய்துகொள்ள விருப்பமில்லை என தெரிகிறது. இருந்தபோதும், காஜல் அவ்வப்போது தொந்தரவு செய்து வந்த‌தால், அவரை தீர்த்துக்கட்ட முடிவெடுத்துள்ளார் சுமர்சிங்.அதன்படி, தங்க வியாபாரம் செய்வதாகவும், தங்கத்தை கரைக்க சயனைடு தேவைப்படுவதாகவும் கூறி ஆன்லைனில் ஆர்டர் செய்து சயனைடு வாங்கியுள்ளார் சுமர்சிங்.சம்பவத்தன்று காஜலுடன் திருவல்லிக்கேணியில் உள்ள தனியார் விடுதியில் இருவரும் தங்கியிருந்தபோது, இருவரும் சயனைடை சாப்பிட்டுள்ளனர். காஜல் சயனைடை விழுங்கிய நிலையில், சுமர்சிங், வெளியே துப்பியுள்ளார்.இதை தொடர்ந்து, காஜலை துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொன்றுள்ளார்.இதையடுத்து காதலியை கொலை செய்த குற்றத்துக்காக திருவல்லிக்கேணி போலீசார் சுமர் சிங்கை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

1434 views

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

7335 views

ஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

1675 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4832 views

பிற செய்திகள்

சந்திரகிரகணம் - காண திரண்ட மக்கள் : பிர்லா கோளரங்கில் சிறப்பு ஏற்பாடு

சந்திரகிரகணத்தை ஒட்டி, சென்னை பிர்லா கோளரங்களில் சந்திரகிரகண காட்சிகளைக் காண ஏராளமானோர் திரண்டுள்ளனர்.

47 views

ராஜகோபால் தனியார் மருத்துவமனை​யில் அனுமதி - வடபழனி தனியார் மருத்துவமனையில் ராஜகோபாலுக்கு சிகிச்சை

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சரவண பவன் உரிமையாளர் ராஜகோபால் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

10 views

"குழந்தையை கடத்தியதற்கான காரணம் தெரியவில்லை" - முருகன், டி.எஸ்.பி.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மாயமான 3 வயது குழந்தை, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

42 views

"தமிழக அரசால் நீட் தேர்வுக்கு விலக்கு பெற முடியவில்லை - "டி.டி.வி.தினகரன்

மத்திய அரசோடு சுமூக உறவு வைத்திருப்பதாக கூறும் தமிழக அரசால் நீட் தேர்வுக்கு விலக்கு பெற முடியவில்லை என்று அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

15 views

வனப்பகுதியில் இருந்து வழிதவறி சென்ற பெண் புள்ளிமான் - மானை மீட்டு சிகிச்சை அளித்து வரும் வனத்துறை

கோபிசெட்டிபாளையம் பகுதியில் கம்பிவேலியில் சிக்கித்தவித்த பெண் புள்ளி மானை வனத்துறையினர் மீட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

14 views

"நீட் மசோதா விவகாரத்தில் தமிழக அரசு நாடகம்" - வைகோ, மதிமுக பொதுச் செயலாளர்

நீட் விவகாரத்தில், தமிழக அரசு நாடகம் ஆடுவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.