ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வை தள்ளி வைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
பதிவு : ஜூலை 12, 2019, 03:16 AM
தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வை தள்ளி வைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்குவது தொடர்பான இடமாறுதல் கலந்தாய்வு 3 நாட்கள் நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவித்தது.இது தொடர்பாக கடந்த மாதம் தமிழக அரசு பிறப்பித்த அரசாணையில், 2017 ஜூன் 1 ம் தேதிக்கு முன் பதவி உயர்வு பெற்றவர்களும், 2019 ஜூன் 1 ம் தேதி வரை தொடர்ந்து 3 ஆண்டுகள் ஒரே பள்ளியில் பணியாற்றி இருக்கும் ஆசிரியர்களும்  மட்டுமே இக்கலந்தாய்வில் பங்கேற்க முடியும் என நிபந்தனை விதிக்கப்பட்டது.இந்த அரசாணையை ரத்து செய்ய கோரி 100 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, அருகில் உள்ள பள்ளிகளில் காலியிடங்கள் இருந்தும் அரசின்  நிபந்தனைக்களால் கலந்தாய்வில் பங்கேற்க முடியவில்லை என மனுதாரர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இன்று முதல் நடைபெறவிருந்த கலந்தாய்வை தள்ளி வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.பணிஇட மாறுதல் தொடர்பான பள்ளிக்கல்வி துறையின் அரசாணைக்கும் இடைக்கால தடை விதித்து  நீதிபதி உத்தரவிட்டார்

தொடர்புடைய செய்திகள்

ஆதார் எண்ணை கட்டாயமாக்கிய உத்தரவை எதிர்த்த வழக்கு - சேம நல நிதியம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

ஓய்வூதியம் மற்றும் வருங்கால வைப்பு நிதி கணக்குகளுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்கிய உத்தரவை எதிர்த்த மனுவுக்கு சேமநல நிதியம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

28 views

பிற செய்திகள்

சந்திரகிரகணம் - காண திரண்ட மக்கள் : பிர்லா கோளரங்கில் சிறப்பு ஏற்பாடு

சந்திரகிரகணத்தை ஒட்டி, சென்னை பிர்லா கோளரங்களில் சந்திரகிரகண காட்சிகளைக் காண ஏராளமானோர் திரண்டுள்ளனர்.

47 views

ராஜகோபால் தனியார் மருத்துவமனை​யில் அனுமதி - வடபழனி தனியார் மருத்துவமனையில் ராஜகோபாலுக்கு சிகிச்சை

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சரவண பவன் உரிமையாளர் ராஜகோபால் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

10 views

"குழந்தையை கடத்தியதற்கான காரணம் தெரியவில்லை" - முருகன், டி.எஸ்.பி.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மாயமான 3 வயது குழந்தை, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

42 views

"தமிழக அரசால் நீட் தேர்வுக்கு விலக்கு பெற முடியவில்லை - "டி.டி.வி.தினகரன்

மத்திய அரசோடு சுமூக உறவு வைத்திருப்பதாக கூறும் தமிழக அரசால் நீட் தேர்வுக்கு விலக்கு பெற முடியவில்லை என்று அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

14 views

வனப்பகுதியில் இருந்து வழிதவறி சென்ற பெண் புள்ளிமான் - மானை மீட்டு சிகிச்சை அளித்து வரும் வனத்துறை

கோபிசெட்டிபாளையம் பகுதியில் கம்பிவேலியில் சிக்கித்தவித்த பெண் புள்ளி மானை வனத்துறையினர் மீட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

14 views

"நீட் மசோதா விவகாரத்தில் தமிழக அரசு நாடகம்" - வைகோ, மதிமுக பொதுச் செயலாளர்

நீட் விவகாரத்தில், தமிழக அரசு நாடகம் ஆடுவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.