பிளாஸ்டிக் பொருட்களுக்கு அரசு விதித்த தடை செல்லும் - சென்னை உயர்நீதிமன்றம்
பதிவு : ஜூலை 12, 2019, 02:18 AM
மறுசுழற்சி செய்ய முடியாத 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
தமிழகத்தில் கடந்த ஜனவரி முதல்  மறுசுழற்சி செய்ய முடியாத 14 வகையான  பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது.இதனை  ரத்து செய்ய கோரி தமிழ்நாடு பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம் பிளாஸ்டிக் பொருட்களுக்கு அரசு விதித்த  தடை செல்லும் என்று தீர்ப்பளித்தது.ஆவின் பால் மருந்து ,எண்ணெய் , பிஸ்கெட் போன்ற பொருட்களை அடைப்பதற்கு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு விலக்கு அளித்திருப்பது பாரபட்சமானது என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டனர்.பால், மருந்து உள்ளிட்டவை அத்தியாவசிய பொருட்கள் என்பதால் விலக்கு அளித்திருப்பதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டதாகவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.ஆனால் அதை ஏற்க மறுத்த நீதிபதிகள்,சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு அவற்றிற்கும் தடை உத்தரவை  அமல்படுத்தினால் தான் அர்த்தமுள்ளதாக இருக்கும் என்று  நீதிபதிகள் வலியுறுத்தியுள்ளனர்.ஆவின் பாலை பிளாஸ்டிக் உறைக்கு பதிலாக கண்ணாடி பாட்டில்களை பயன்படுத்துவது குறித்து ஆலோசிக்க வேண்டுமெனவும் ,பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக  துணி, சணல்,பாக்குமட்டை போன்ற மாற்று பொருட்களை ஊக்குவிக்க வேண்டுமெனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.கடுமையான அபராதம் விதிக்காவிட்டால் பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை முழுமையாக இருக்காது என்றும், பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை உத்தரவு காகிதத்தில் மட்டும் இல்லாமல், கண்டிப்புடன் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டுமெனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

4 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் - ரூ.4 லட்சம் அபராதம்

தஞ்சையில் உள்ள தனியார் குடோனில் சுமார் 4 டன் அளவிலான தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் இருந்தது கண்டறியப்பட்டது.

42 views

பிளாஸ்டிக் தடை எதிரொலி : காகிதப் பைகளில் கட்டித் தரப்படும் மணப்பாறை முறுக்குகள்

தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்ட நிலையில் வணிகர்கள் பலரும் மாற்று பொருட்களுக்கு மாறி உள்ளனர்.

74 views

கோவில்களுக்கு பிளாஸ்டிக் தடை உத்தரவு குறித்து சுற்றறிக்கை

கோயில்களில் பிளாஸ்டிக் தடை உத்தரவை, பின்பற்றுவது குறித்து உறுதி செய்து அறிக்கை அனுப்ப அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.

60 views

பிற செய்திகள்

பாலாற்றில் உள்ள தடுப்பணைகளை உயர்த்தும் ஆந்திர அரசை எச்சரிக்க வேண்டும் - ராமதாஸ்

பாலாற்றின் குறுக்கே சட்டவிரோதமாக 21 தடுப்பணைகளை கட்டியுள்ள ஆந்திர அரசு, இப்போது அவற்றின் உயரத்தை அதிகரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

14 views

பாலாற்றில் உள்ள அணைகளை உயர்த்தும் ஆந்திர அரசு : தடுத்து நிறுத்த தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை

பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்ணையை உயர்த்தும் பணியில் ஆந்திர அரசு ஈடுபட்டுள்ளதால் திருவண்ணாமலை உள்ளிட்ட 5 மாவட்டங்கள் பாலைவனம் ஆகும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

10 views

கடலூர், நாகையில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி...

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கத்தின் சார்பில் பல ஊர்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

12 views

கஜா புயல் - மறியலில் ஈடுபட்ட 140 பேர் மீதான வழக்கு ரத்து : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கஜா புயலின் போது நிவாரணம் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டதாக 140 பேர் மீது தொடரப்பட்ட வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.

10 views

தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் நியமனத்திற்கு, உயர்நீதிமன்றம் விதித்த தடை நீக்கம் - உச்சநீதிமன்றம்

தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் நியமனத்திற்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை விதித்த இடைக்கால தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

16 views

பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

39 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.