அத்திவரதர் உற்சவத்தின் பதினோராவது நாள் : காவி நிற பட்டு உடுத்தி காட்சி தந்த அத்திவரதர்
பதிவு : ஜூலை 11, 2019, 06:35 PM
மாற்றம் : ஜூலை 11, 2019, 06:37 PM
காஞ்சிபுரம் அத்திவரதர் உற்சவத்தின் பதினோராவது நாளான இன்று, அத்திவரதர் காவி நிற பட்டு உடுத்தி அருள்பாலித்து வருகிறார்.
40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் உற்சவம் மிகவும் விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்த உற்சவத்தின் 11வது நாளான இன்று அத்திவரதர் காவி நிற பட்டு உடுத்தி காட்சி தந்து வருகிறார். இந்நிலையில் விடியற்காலையில் இருந்தே பல்லாயிரக்கணக்கான மக்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாலும், நாளை இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வருகை தர உள்ளதாலும், போலீசாரின் கட்டுப்பாடுகள் அதிகரித்து வருகிறது. இந்த உற்சவத்தில் நேற்றுவரை 17 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சுவாமியை தரிசனம் செய்து விட்டு சென்றுள்ளனர். வரதராஜ பெருமாள் கோவில் ஆனி உற்சவத்தையொட்டி ஆனி கருட சேவை இன்று நடைபெறுவதால், காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே அத்தி வரதர் தரிசனம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

727 views

பிற செய்திகள்

ராஜகோபாலை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க கோரிய வழக்கு - சிகிச்சை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சரவணபவன் ராஜகோபாலை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க கோரிய வழக்கில் அவருக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

39 views

ரயில்வே மேம்பாலத்தை பராமரிக்க நீதிமன்றம் உத்தரவு

தஞ்சை சாந்தப்பிள்ளை ரயில்வே கேட் மேம்பாலத்தை ஆய்வு செய்து பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

21 views

2 பேருடன் திரும்பிச் சென்ற இலங்கை படகு - கஞ்சா கடத்தல் கும்பலா என போலீசார் விசாரணை

தாரண்யம் கடல் பகுதியில் படகில் இருந்து இறங்கி நீந்திவந்த இலங்கை நபரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

11 views

தாய்லாந்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றிய ஏஜெண்ட் - ஏஜெண்ட் மீது நடவடிக்கை எடுக்குமாறு பெண் போராட்டம்

தாய்லாந்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்த ஏஜெண்ட் மீது நடவடிக்கை எடுக்குமாறு திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டார்.

7 views

தாய்லாந்தில் தவித்த 2 மகன்கள் - போராடி மீட்ட தாய்

தாய்லாந்தில் வேலை வாங்கி தருவதாக கூறி, பண மோசடி செய்த ஏஜெண்ட் மீது நடவடிக்கை எடுக்குமாறு திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில், பெண் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டார்.

29 views

தீபாவளி சீட்டு நடத்தி ரூ.30 லட்சம் மோசடி - ஒருவர் கைது

விழுப்புரம் அருகே தீபாவளிச் சீட்டு நடத்தி 30 லட்சம் ரூபாய் மோசடி செய்தது தொடர்பான புகாரில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.