விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள விம்பிள்டன்...
பதிவு : ஜூலை 11, 2019, 02:55 PM
விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு உலகின் முன்னிலை வீரர்களான ஜோகோவிச், ஃபெடரர் மற்றும் நடால் உள்ளிட்டோர் முன்னேறி உள்ளனர்.
விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு உலகின் முன்னிலை வீரர்களான ஜோகோவிச், ஃபெடரர் மற்றும் நடால் உள்ளிட்டோர் முன்னேறி உள்ளனர். அதே சமயம் கலப்பு இரட்டையரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட செரினா, முர்ரே ஜோடி தோல்வியை தழுவி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தது. 

உலகின் பழமையான கிராண்ட்ஸ்லாம் தொடரான விம்பிள்டன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார், ரஃபேல் நடால் விறுவிறுப்பான கட்டத்தில் விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெறும் இந்த தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின், காலிறுதி போட்டியில் உலகின் முன்னிலை வீரரான ஸ்பெயினின் ரஃபேல் நடால், அமெரிக்காவின் சாம் குர்ரேவை எதிர்கொண்டார். ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய நடால், 7-5, 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

ஃபெடரர் அரையிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்

மற்றொரு காலிறுதி போட்டியில் உலகின் இரண்டாம் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், ஜப்பானின் நிஷிகோரியுடன் மோதினார். ஆரம்பத்தில் சறுக்கிய ஃபெடரர், பின்னர் சுதாரித்துக் கொண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இறுதியில் 4-6, 6-1, 6-4,6-4 என்ற செட் கணக்கில் நிஷிகோரியை, ஃபெடரர் வீழ்த்தினார். நாளை நடைபெறும் அரையிறுதி போட்டியில் ஃபெடரர் மற்றும் நடால் பலப்பரீட்சை நடத்த உள்ளனர். 

காலிறுதி போட்டியில் ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச்

மற்றொரு ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச், பெல்ஜியத்தின் டேவிட் கோஃபினை எதிர்கொண்டார். ஆட்டம் முழுவதும் ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச், டேவிட் கோஃபினை எளிதாக வீழ்த்தி அரையிறுதி போட்டிக்கு முன்னேறினார். 

கலப்பு இரட்டையர் பிரிவில் செரினா, முர்ரே அதிர்ச்சி தோல்வி

கலப்பு இரட்டையர் பிரிவில் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் மற்றும் பிரிட்டனின் ஆண்டி முர்ரே ஜோடி அதிர்ச்சி தோல்வியை தழுவியது. ரசிகர்களின் பெரும் ஆரவாரத்திற்கு மத்தியில் களமிறங்கிய செரினா, முர்ரே ஜோடி காலிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை தவறவிட்டது.

தொடர்புடைய செய்திகள்

இறுதி கட்டத்தில் விம்பிள்டன் டென்னிஸ் தொடர் : நாளை இறுதி போட்டி

விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டிக்கு உலகின் முன்னிலை வீரர்களான ரோஜர் ஃபெடரர் மற்றும் நோவாக் ஜோகோவிச் முன்னேறியுள்ளனர்.

66 views

விம்பிள்டன் டென்னிஸ் தொடர் - வீனஸ் வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி

விம்பிள்டன் ஓபன் டென்னிஸ் தொடரில், ஐந்து முறை சாம்பியனான வீனஸ் வில்லியம்ஸ், 15 வயது வீராங்கனையிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.

44 views

பிற செய்திகள்

"புதிய ஆசிரியர்கள் பணி நியமனம் கூடாது" - பள்ளிக் கல்வித்துறை செயலாளர் அதிரடி உத்தரவு

அரசு உதவிபெறும் பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

285 views

வாக்காளர் விவரங்களை சரிபார்க்க - வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

திண்டுக்கல் வத்தலக்குண்டு சாலையில் அரசு கல்லூரி மாணவிகள் திடீரென நடனமாடினர்.

24 views

ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தற்கொலை முயற்சி: "குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்" - நெல்லை மாவட்ட ஆட்சியர்

ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தற்கொலைக்கு முயலுபவர்கள் மீது, குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும் என்று நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் எச்சரித்துள்ளார்.

110 views

3 மாதத்தில் 16 கொலை சம்பவங்கள் - போலீசார் 5 பேர் அதிரடி இடமாற்றம்

தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் கொலை சம்பவங்கள் நிகழ்ந்து வரும் நிலையில், பணியில் கவனக்குறைவாக இருந்ததாக சிறப்பு உதவி ஆய்வாளர் உள்பட 5 போலீசார் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

115 views

மேற்கூரை ஓடுகள் உடைந்து சேதம் - அங்கன்வாடி மைய கட்டடத்தின் அவலம்

ஓமலூர் அடுத்த காடையாம்பட்டி அங்கன்வாடி மைய கட்டடத்தின் மேற்கூரைகள் உடைந்து சேதம் அடைந்து கிடப்பதால், குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

28 views

இனிவரும் அனைத்து தேர்தலிலும் அதிமுகவே வெற்றி பெறும் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் மட்டுமின்றி வருகின்ற அனைத்து தேர்தலிலும் இனி அதிமுகவே வெற்றி பெறும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

65 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.