கர்நாடக அமைச்சரவை நாளை காலை அவசரமாக கூடுகிறது - ஆட்சியை கலைக்க ஆளுநருக்கு பரிந்துரைக்கப்படும் என தகவல்
பதிவு : ஜூலை 11, 2019, 12:27 AM
முதலமைச்சர் குமாரசாமி நாளை அமைச்சரவை கூட்டத்தை கூட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் உள்பட 16 பேர் ராஜினாமா செய்துள்ளனர். மேலும் 2 சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் ஆதரவை வாபஸ் பெற்றுள்ளனர். மேலும் அதிருப்தி எம்எல்ஏக்கள் 8 பேர் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளதால் குமாரசாமி அரசு தனது பெறும்பான்மையை இழந்துள்ளது. இந்த நிலையில் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் முன்னதாக சட்டசபை மாண்புகளை காப்பாற்ற நாளை 11 மணிக்கு  அவசரமாக அமைச்சரவையை கூட்ட குமாரசாமி முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதன் பிறகு ஆட்சியை கலைக்க ஆளுநருக்கு பரிந்துரைக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் பாஜக ஆட்சி அமைப்பதற்கான வியூகங்களை மறைமுகமாக செய்து வருவாதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பா.ஜ.க.வுக்கு எதிராக காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் :இதனிடையே, பெங்களூரூவில் உள்ள ராஜ்பவனில், பா.ஜ.க. விற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத், கைது செய்யப்பட்டார். கர்நாடக அரசியலில் குழப்பம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி எம்.எல்.ஏ.க்கள் உச்சநீதிமன்றத்தில், அம்மாநில சபாநாயகருக்கு எதிராக மனுதாக்கல் செய்துள்ளனர். ராஜினாமா கடிதம் மீது முடிவெடுப்பதில் திட்டமிட்டே காலதாமதம் செய்வதாக தங்கள் மனுவில் தெரிவித்துள்ளனர்.இந்த மனு மீதான விசாரணை வியாழக்கிழமை நடைபெறுகிறது. 

சட்டப்பேரவை வளாகத்தில் 144 தடை :
பெங்களூரு சட்டப்பேரவை வளாகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.நாளை முதல் வரும் 14ஆம் தேதி வரை நான்கு நாட்கள், இந்த உத்தரவு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் காங்கிரசுக்கு எந்த தள்ளாட்டமும் இல்லை - கே.எஸ். அழகிரிகர்நாடகாவில், காங்கிரஸ் கட்சிக்கு எந்த தள்ளாட்டமும் இல்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கர்நாடகாவில் பா.ஜ.க. குதிரை பேரம் நடத்தி வருவதாகவும், இதற்கு எதிராக காங்கிரஸ் செயல்பட்டு வருவதாகவும் கூறினார். எப்பொதும், நேர்மை தான் வெல்லும் என்றும், பா.ஜ.க. வின் பண அரசியல், ஜாதி அரசியல், மத அரசியல் செல்லாது என்றும் கே.எஸ்.அழகிரி குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

தோல்விக்கு பின் அமேதி தொகுதிக்கு சென்ற ராகுல் காந்தி...

எதிர்கட்சி பணி எளிதானது, மகிழ்ச்சியானது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

35 views

தேர்தலுக்கு பின் முதன்முறையாக ராகுல் காந்தி தென்மாநிலம் வருகை

பிரதமர் மோடியும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் ஒரே நாளில் கேரளாவுக்கு வருகை தரவுள்ளனர்.

117 views

"கர்நாடகா இடைத்தேர்தலில் கூட்டணி பலன் தந்துள்ளது" - ப.சிதம்பரம்

கூட்டணி பலன் தந்துள்ளது என்ற பாடத்தை இதன் மூலம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

417 views

பிற செய்திகள்

கோவில் பூசாரி உள்பட 3 பேர் நரபலி? - கோவில் முழுவதும் ர‌த்த‌த்தை தெளித்து சென்ற கொடூரம்

ஆந்திராவில், 3 பேர் தலை வெட்டி நரபலி கொடுக்கப்பட்டதாக, பொது மக்களிடையே அச்சம் பரவியுள்ளது.

216 views

பாதுகாப்பு கேட்ட பாஜக எம்.எல்.ஏ.வின் மகள் : நீதிமன்றத்தில் வைத்து தாக்கப்பட்டதால் பரபரப்பு

அலகாபாத் நீதிமன்றத்தில் பாதுகாப்பு கேட்டு வந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ ராஜேஷ் மிஷ்ராவின் மகள் சாக்‌ஷி மற்றும் அவரது கணவர் அஜிதேஷ் மீது சிலர் தாக்குதல் நடத்தினர்

59 views

ஸ்ட்ரெச்சர் வழங்காமல் இழுத்தடித்த நேரத்தில் சாலை ஓரத்திலேயே பெண் ஒருவருக்கு பிரசவம்

உத்தரபிரதேசம் மாநிலம் மகோபாவில் ஸ்ட்ரெச்சர் வழங்காமல் இழுத்தடித்த நேரத்தில் சாலை ஓரத்திலேயே பெண் ஒருவருக்கு பிரசவம் நடைபெற்றது.

5 views

மும்பை அருகே 10 வயது சிறுமி பலாத்காரம் - செக்யூரிட்டிக்கு சரமாரி அடிஉதை

மும்பை அருகே விரார் பகுதியில் செக்யூரிட்டி பணியில் இருந்த நபர் அந்தப் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார்.

8 views

புதிய கல்விக் கொள்கை தொடர்பான வரைவு அறிக்கை : பொதுமக்களின் கருத்துகளை கேட்ட பிறகே இறுதி முடிவு - மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால்

புதிய கல்விக் கொள்கை தொடர்பான வரைவு அறிக்கையில் பொதுமக்களின் கருத்துகளை கேட்ட பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும் என்று மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்தார்.

12 views

தேசிய புலனாய்வு முகமை சட்ட திருத்த மசோதா -நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றம்

தேசிய புலனாய்வு முகமை சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.