முகிலனுக்கு எதிரான பாலியல் புகார் : வரும் 24-ஆம் தேதி வரை முகிலனை சிறையில் அடைக்க உத்தரவு
பதிவு : ஜூலை 10, 2019, 04:23 AM
பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட சமூக செயற்பாட்டாளர் முகிலன், கரூர் நீதிபதி வீட்டில் நள்ளிரவில் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து அவர், திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலையை சேர்ந்த முகிலன் பிப்ரவரி 15-ல் சென்னை எழும்பூர் ரயில்நிலையத்தில் மாயமானார். இந்நிலையில் 6-ம் தேதி திருப்பதியில் அவரை ஆந்திர போலீசார் மீட்டனர். இதனிடையே பெண் ஒருவர் அளித்த பாலியல் புகாரில் முருகனை சிபிசிஐடி போலீசார் கைது செய்து எழும்பூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் ரோஸ்லின் துரை முன்பு ஆஜர்படுத்தினர். இதனையடுத்து ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பபட்ட அவர்,  மருத்துவ பரிசோதனை நிறைவு பெற்றதை தொடர்ந்து, நேற்று சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதனையடுத்து முகிலனை  கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டார். பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்ட முகிலன் நள்ளிரவில் கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விஜயகார்த்திக்  வீடடில் ​ ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வரும் 24-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து அவர், திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே சென்னை நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக நள்ளிரவில் தன்னை கரூர் நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தியுள்ளதாக முகிலன் முழக்கமிட்டார். எந்த உண்மையும் வெளிவரக்கூடாது என காவல்துறை நினைப்பதகாவும் அவர் கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

1448 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4856 views

பிற செய்திகள்

வேலூர் மக்களவை தொகுதி அதிமுக தேர்தல் பணிக்குழு அறிவிப்பு

வேலூர் மக்களவை தொகுதி அதிமுக தேர்தல் பணிக்குழு அறிவிக்கப்பட்டு உள்ளது.

87 views

அரசு நர்சுகளுக்கு பாதுகாப்பு : செயல்முறை விளக்கம்

அரசு நர்சுகள் மீது அவ்வப்போது தாக்குதல் சம்பவங்கள் நடப்பதால் இதனை தடுக்கும் வகையில் பாதுகாப்பை உறுதி செய்யும் செயல் முறை விளக்கம் நிகழ்த்தி காட்டப்பட்டது.

11 views

நீதிமன்ற தீர்ப்பு தமிழில் வெளியாகி இருப்பது மகிழ்ச்சியானது - மாஃபா பாண்டியராஜன் வரவேற்பு

நீதிமன்ற தீர்ப்பு தமிழில் வெளியாகி இருப்பது மகிழ்ச்சியானது என்று தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃ பா பாண்டியராஜன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

17 views

சாதனைக்கு உடல் குறைபாடு தடை இல்லை - பன்வாரிலால் புரோகித்

மாற்றுத்திறனாளிகளுக்கான 2 நாள் கருத்தரங்கத்துடன் கூடிய வேலை வாய்ப்பு முகாம் சென்னை- தேனாம்பேட்டையில் துவங்கியது.

19 views

சினிமாவை மிஞ்சும் வகையில் நாடகம் - காதலனுடன் சேர்ந்து குழந்தையை கடத்திய இளம் பெண்...

காதலனுடன் சேர்ந்து குழந்தையை கடத்தி விட்டு சினிமாவை மிஞ்சும் வகையில் நாடகமாடிய இளம்பெண்ணை சென்னை போலீசார் 10 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு கைது செய்துள்ளனர்.

290 views

பள்ளிகளில் மாணவர் காவல் படை விரிவாக்கம் செய்யப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தமிழக சட்டப்பேரவையில் இன்று பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காவலர் பதக்கங்கள் எண்ணிக்கை 1500ல் இருந்து 3000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக கூறினார்.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.