தமிழகத்தில் பரவலாக மழை
பதிவு : ஜூலை 10, 2019, 01:26 AM
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மிதமான முதல் கன மழை பெய்தது.
திண்டுக்கல், வேடசந்தூர், சின்னாளபட்டி, எரியோடு, தாடிக்கொம்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக காற்றுடன் கூடிய கன மழை பெய்தது, இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசத் தொடங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.கொடைக்கானல் மலைப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மிதமான மழை பெய்தது. கொடைக்கானல் வத்தலகுண்டு பிரதான சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.நாமக்கல் ,சேந்தமங்கலம், கொல்லிமலை ஆகிய இடங்களில். 30 நிமிடங்களுக்கு மேலாக மிதமானது முதல் கன மழை பெய்த்து. இதனால் வறண்ட விவசாய நிலங்களில் மழை நீர் தேங்கியது கண்டு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தார்.கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை, அழகியமண்பம், முடைக்காடு, வட்டார பகுதிகளில் திடீரென கனமழை பெய்தது. இதனால், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் நனைந்தபடியே வீடு திரும்பினர்.இதே போன்று அரியலூர், செந்துறை ஜெயங்கொண்டம் உள்ளிட்ட அனைத்து பகுதியிலும் லேசானது முதல் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.நீலகிரி மாவட்டம் முதுமலை, கூடலூர், தேவாலா, ஊட்டி, எமரால்டு, அவலாஞ்சி ஆகிய நீர்பிடிப்பு பகுதியில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.பலத்த காற்று வீசியதால் மின்தடை ஏற்பட்டது.ஓசூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பெய்த திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பத்தலபள்ளி, சூளகிரி, காமன்தொட்டி, உத்தனப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை கொட்டியது.சிவகங்கை மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் அரை மணி நேரமாக இடியுடன் கூடிய கன மழை பெய்தது.மழை காரணமாக சாலையில் தண்ணீர் தேங்கி இருந்தது. வாகனங்கள் மழை நீரில் ஊர்ந்து சென்றன.இதேபோல், திருவள்ளூர் மாவட்டத்தில், பொன்னேரி, சோழவரம், பழவேற்காடு, மீஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது. பொன்னேரி ரயில்வே பாலத்தின் கீழ் தண்ணீர் தேங்கியதால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.நீலகிரி மாவட்டத்தில், குன்னுார் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் சுமார் 45 நிமிடங்கள் பெய்த மழையால், விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கடலூர் மாவட்டத்தில், விருத்தாச்சலம்,  திட்டக்குடி உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது.புதுச்சேரியிலும், மாலைக்கு பிறகு சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.  இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான காற்று வீசியதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பரவலாக மழை

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.

188 views

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

664 views

பிற செய்திகள்

நெல்லையப்பர் கோயில் ஆனி பெருந்திருவிழா : தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் நிறைவு

நெல்லையப்பர் கோயிலில் 45 நாட்கள் நடைபெற்ற ஆனிப் பெருந்திருவிழா தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் நிறைவு பெற்றது.

2 views

திண்டுக்கல் : ஸ்ரீ அஞ்சலி வரத ஆஞ்சநேயர் திருக்கோயில் விழா

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியில் 12 அடி உயரமுள்ள ஸ்ரீ அஞ்சலி வரத ஆஞ்சநேயர் திருக்கோயில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு, சுவாமி வஜ்ர அங்கி ஸேவையில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

11 views

ரூ.18 லட்சம் கையாடல் புகார் : ஆவின் மேலாளர் பணியிடை நீக்கம்

திண்டுக்கல் ஆவின் பாலக மேலாளர் 18 லட்சம் ரூபாய் கையாடல் செய்தததாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

14 views

ராஜகோபாலை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க கோரிய வழக்கு - சிகிச்சை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சரவணபவன் ராஜகோபாலை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க கோரிய வழக்கில் அவருக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

48 views

ரயில்வே மேம்பாலத்தை பராமரிக்க நீதிமன்றம் உத்தரவு

தஞ்சை சாந்தப்பிள்ளை ரயில்வே கேட் மேம்பாலத்தை ஆய்வு செய்து பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

33 views

2 பேருடன் திரும்பிச் சென்ற இலங்கை படகு - கஞ்சா கடத்தல் கும்பலா என போலீசார் விசாரணை

தாரண்யம் கடல் பகுதியில் படகில் இருந்து இறங்கி நீந்திவந்த இலங்கை நபரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.