"பள்ளிகள், மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்த மாட்டோம்" - அமைதி பேச்சுவார்த்தையில் தலிபான்கள் உறுதி
பதிவு : ஜூலை 10, 2019, 12:46 AM
ஆப்கானிஸ்தானில் உள்ள மருத்துவமனைகள், பள்ளி, கல்லூரிகள் மீது இனி தாக்குதல் நடத்த மாட்டோம் என அமெரிக்காவுடன் நடந்த பேச்சுவார்த்தையில் தலிபான்கள் உறுதியளித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் அமைதியை கொண்டு வரும் முயற்சியில், அந்நாட்டு அரசும், அமெரிக்காவும் இறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, கத்தார் நாட்டின் தோஹாவில்,  ஆப்கன் மதத்தலைவர்கள், தலிபான் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் மற்றும் அமெரிக்க பிரநிதிகளுடன் பேச்சுவார்த்தை கடந்த 7 ஆம் தேதி துவங்கியது. இந்த பேச்சுவார்த்தையின் போது, ஆப்கனில் இருந்து, அமெரிக்கப் படைகளை திரும்பப் பெறுவது,  பெண்களுக்கான உரிமைகள் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து, இரு தரப்பும் பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.மேலும், மருத்துவமனைகள், பள்ளி, கல்லூரிகள் மீது இனி தாக்குதல் நடத்த மாட்டோம் என, பேச்சுவார்த்தையில் தலிபான்கள் உறுதியளித்துள்ளனர். இந்த பேச்சுவார்த்தை வெற்றியடைந்தால், ஆப்கனில் அமைதி நிலவி பிரச்சனை முடிவுக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பிற செய்திகள்

பிரான்ஸ் தேசிய தின கொண்டாட்டம் : கண்கவர் அணிவகுப்பு, வியக்க வைத்த சாகசம்

பிரான்ஸின் தேசிய தினம் அதன் தலைநகர் பாரீஸில் வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

21 views

வணிக வளாகத்தில் இளைஞர்கள் போராட்டம் : குண்டுக்கட்டாக தூக்கி அப்புறப்படுத்திய போலீசார்

ஹாங்காங்கில் தீவிரமடையும் அரசுக்கு எதிரான போராட்டம் போராட்டக்காரர்கள், போலீசார் இடையே கடும் மோதல்

22 views

100 ஆண்டுகள் பழமையான ஹோட்டலில் பற்றிய தீ

100 ஆண்டுகள் பழமையான ஹோட்டலில் பற்றிய தீ மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்திய கரும்புகை

25 views

டிரோன் எனும் ஆளில்லா குட்டி விமானங்களுக்கான போட்டி : மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் வானில் வட்டமடித்த டிரோன்கள்

இத்தாலியில் உள்ள துரின் நகரில் டிரோன் எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்களுக்கான இறுதிப்போட்டி நடைபெற்றது.

16 views

பிரேசிலில் நோயாளிகளை குணப்படுத்த உதவும் நாய்கள்...

பிரேசிலில் நோயாளிகளை குணப்படுத்த நாய்கள் பெரியளவில் உதவி வருகின்றன.

31 views

பிரான்ஸ் தேசிய தின கொண்டாட்டம்...

பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட அந்நாட்டு பிரதமர் இமானுவேல் மேக்ரான், ராணுவ மரியாதை ஏற்றுக்கொண்டார்.

21 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.