வாரிசு அரசியல் குறித்து பேரவையில் அதிமுக - திமுக இடையே கருத்து மோதல்
பதிவு : ஜூலை 10, 2019, 12:33 AM
திமுகவில் வாரிசுகள் அனைவரும் உழைப்பால் உயர்ந்தவர்கள் என்றும் தாந்தோன்றித்தனமாக பதவிக்கு வரவில்லை என்றும் திமுக கொறடா சக்கரபாணி தெரிவித்தார்.
சட்டத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் ரவி, மற்ற கட்சிகளை போல் தந்தை, மகன், பேரன் என வாரிசு அரசியலில் அதிமுக ஈடுபடவில்லை என்றார்.இதற்கு, திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.பின்னர் பேசிய திமுக கொறடா சக்கரபாணி வாரிசு அரசியல் என வரும்போது ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத்,ஜெயக்குமார் மகன் ஜெயவர்தன்,ராஜன்செல்லப்பா மகன் ராஜ் சத்யன் ஆகியோரை சுட்டிக்காட்டி இவர்கள் எல்லாம் வாரிசுகள் இல்லையா என கேள்வி எழுப்பினார்.மேலும் ஸ்டாலின் தன்னுடைய உழைப்பால் உயர்ந்து கட்சி தலைவராகி இருப்பதாகவும்,பல்வேறு போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றவர் தான்,தற்போது இளைஞரணி செயலாளர் ஆகி இருப்பதாகவும், தான் தோன்றித்தனமாக யாரும் பதவிக்கு வரவில்லை எனவும் பதில் அளித்தார்.தொடர்ந்து திமுகவினர்,அதிமுக உறுப்பினர் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தபடியே இருந்தனர்.பின்னர் பேசிய சபாநாயகர், அதிமுக உறுப்பினர் யார் பெயரையும் குறிப்பிட்டு சொல்லவில்லைநீங்களாக கற்பனை செய்து கொள்ள வேண்டாம் என விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.இந்த விவாதம் நடைபெற்ற போது திமுக தலைவர் ஸ்டாலின் அவையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

வெளிநாடு செல்பவர்களுக்கு முன் வைப்புத் தொகை : பிரச்சினை என்றால் ஊர் திரும்ப உதவும்

தமிழகத்தில் இருந்து குவைத்துக்கு வீட்டு வேலை செய்ய செல்லும் பெண்கள் பலர் ஏமாற்றப்படுவதாக குவைத் மனித உரிமை ஆணையத்தில் பணிபுரியும் நாகர்கோயிலை சேர்ந்த இளைஞர் ஆல்வின் ஜோஸ் தெரிவித்துள்ளார்.

97 views

மின்வாரிய தொழிலாளர்களுக்கு தோசை சுட்டுக்கொடுத்த அமைச்சர் விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மின் கம்பங்களை சீரமைக்கும் பணியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்வாரிய தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

268 views

கஜா புயல் நிவாரணம் குறைவு என குற்றம்சாட்டுவது தவறு - முதலமைச்சர் பழனிசாமி

கஜா புயல் நிவாரணம் குறைவு என குற்றம்சாட்டுவது தவறு - முதலமைச்சர் பழனிசாமி

301 views

பிற செய்திகள்

பாலாற்றில் உள்ள தடுப்பணைகளை உயர்த்தும் ஆந்திர அரசை எச்சரிக்க வேண்டும் - ராமதாஸ்

பாலாற்றின் குறுக்கே சட்டவிரோதமாக 21 தடுப்பணைகளை கட்டியுள்ள ஆந்திர அரசு, இப்போது அவற்றின் உயரத்தை அதிகரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

14 views

பாலாற்றில் உள்ள அணைகளை உயர்த்தும் ஆந்திர அரசு : தடுத்து நிறுத்த தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை

பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்ணையை உயர்த்தும் பணியில் ஆந்திர அரசு ஈடுபட்டுள்ளதால் திருவண்ணாமலை உள்ளிட்ட 5 மாவட்டங்கள் பாலைவனம் ஆகும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

10 views

கடலூர், நாகையில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி...

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கத்தின் சார்பில் பல ஊர்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

12 views

கஜா புயல் - மறியலில் ஈடுபட்ட 140 பேர் மீதான வழக்கு ரத்து : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கஜா புயலின் போது நிவாரணம் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டதாக 140 பேர் மீது தொடரப்பட்ட வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.

10 views

தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் நியமனத்திற்கு, உயர்நீதிமன்றம் விதித்த தடை நீக்கம் - உச்சநீதிமன்றம்

தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் நியமனத்திற்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை விதித்த இடைக்கால தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

16 views

பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

39 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.