பொதுமக்கள் கட்டும் கோயிலை அகற்ற வந்த அதிகாரிகள் - பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
பதிவு : ஜூலை 09, 2019, 07:10 PM
பழனியில் பொதுமக்கள் சார்பில் கட்டபடும் விநாயகர் கோயிலை நகராட்சி அதிகாரிகள் இடிக்க வந்ததை கண்டித்து பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
பழனியில் பொதுமக்கள் சார்பில் கட்டபடும் விநாயகர் கோயிலை நகராட்சி அதிகாரிகள் இடிக்க வந்ததை கண்டித்து பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பழனியில் அம்பலகாரர் தெருவில் பொதுமக்கள் சார்பில் சிறிய விநாயகர் கோயில் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. பொது இடத்தில் நகராட்சி அனுமதியின்றி கட்டப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து, கோயிலை அகற்ற நகராட்சி ஊழியர்கள் குவிந்தனர். இதனையடுத்து கோயிலை சுற்றி பெண்கள் நிற்க, அவர்களை அப்புறப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்ட போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த கார்த்திகா என்ற பெண் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர்மீது போலீசார் தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர். இதனைத் தொடர்ந்து தற்காலிகமாக கோயிலை அகற்றும் பணியை அதிகாரிகள் கைவிட்டனர். 

தொடர்புடைய செய்திகள்

உரிமையாளருடன் கோபித்துக்கொண்டு கருவறைக்குள் அம்மன் சிலையுடன் கிளி ஐக்கியம்

கோவை - பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த முருகேஷ் என்பவர், கடந்த ஓராண்டிற்கும் மேலாக வீட்டில் வளர்த்து வந்த கிளியை, திட்டியதால், உரிமையாளருடன் கோபித்துக்கொண்டே, பறந்து சென்றது.

1072 views

மியூசிக்கலி ஆப்பில் பெண் போல நடித்த இளைஞர் தற்கொலை

மியூசிக்கலி ஆப்பில் பெண் போல பாவித்து நடித்த இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

10540 views

சபரிமலையில் பெண்கள் நுழைய எதிர்ப்பு தெரிவித்து, கோவையில் பேரணி...

புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து தரப்பு பெண்களும் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவையில், ஐயப்ப பக்தர்கள் சேவா சங்கம் சார்பில் நடைபெற்ற பேரணியில் சுமார் 3 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

515 views

பிற செய்திகள்

சொத்துக்களை பறித்த மகள்கள் - மீட்டு ஒப்படைத்த கோட்டாட்சியர்...

மதுரை அருகே முதியோர் இல்லத்தில் பெற்றோரை விட்டதால் 2 மகளிடமிருந்து சொத்துக்களை மீட்டு வயதான தம்பதியினரிடம் கோட்டாட்சியர் ஒப்படைத்தார்.

2 views

பாலாற்றில் உள்ள தடுப்பணைகளை உயர்த்தும் ஆந்திர அரசை எச்சரிக்க வேண்டும் - ராமதாஸ்

பாலாற்றின் குறுக்கே சட்டவிரோதமாக 21 தடுப்பணைகளை கட்டியுள்ள ஆந்திர அரசு, இப்போது அவற்றின் உயரத்தை அதிகரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

18 views

பாலாற்றில் உள்ள அணைகளை உயர்த்தும் ஆந்திர அரசு : தடுத்து நிறுத்த தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை

பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்ணையை உயர்த்தும் பணியில் ஆந்திர அரசு ஈடுபட்டுள்ளதால் திருவண்ணாமலை உள்ளிட்ட 5 மாவட்டங்கள் பாலைவனம் ஆகும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

11 views

கடலூர், நாகையில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி...

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கத்தின் சார்பில் பல ஊர்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

12 views

கஜா புயல் - மறியலில் ஈடுபட்ட 140 பேர் மீதான வழக்கு ரத்து : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கஜா புயலின் போது நிவாரணம் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டதாக 140 பேர் மீது தொடரப்பட்ட வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.

11 views

தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் நியமனத்திற்கு, உயர்நீதிமன்றம் விதித்த தடை நீக்கம் - உச்சநீதிமன்றம்

தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் நியமனத்திற்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை விதித்த இடைக்கால தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.