பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கு - 9 பேர் நீதிமன்றத்தில் சரண்
பதிவு : ஜூலை 09, 2019, 04:39 AM
ஜீவஜோ‌தி கணவ‌ர் பிரின்ஸ் சா‌ந்தகுமா‌ர் கொலை வ‌ழ‌க்‌கி‌ல் தண்டிக்கப்பட்ட 9 பேர் சென்னை நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
ஜீவஜோ‌தி கணவ‌ர் பிரின்ஸ் சா‌ந்தகுமா‌ர் கொலை வ‌ழ‌க்‌கி‌ல் தண்டிக்கப்பட்ட 9 பேர் சென்னை நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மேலும் சம்பந்தப்பட்ட அனைவரும் ஜூலை 7-ம் தேதிக்குள் சரணடைய நீதிமன்றம் உத்தரவிட்டது.இதையடுத்து டேனியல், தமிழ்செல்வன், சேது, காசி , கார்மேகம், உள்ளிட்ட 9 பேர் சென்னை 4 -ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் சரணடைந்தனர். சரவண பவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபால், ஜனார்த்தனன் ஆகியோர் சரணடைய கூடுதல் அவகாசம் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதால் அவர்கள் சரணடையவில்லை.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.