ரூ. 5 ஆயிரம் கோடியில் 2 மின் நிலையம் - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு
பதிவு : ஜூலை 08, 2019, 07:39 PM
மாற்றம் : ஜூலை 08, 2019, 07:44 PM
5 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், சென்னையில் 2 மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.
5 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், சென்னையில் 2 மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். பேரவையில் விதி 110 - ன் கீழ் தாக்கல் செய்த அறிக்கையில், எடப்பாடி பழனிச்சாமி, இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

சென்னை சைதாப்பேட்டையில், 10 கோடி ரூபாய் செலவில், கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகம் கட்டப்படும் - அரசு பள்ளி மாணவர்களுக்கு காலணிக்கு பதிலாக " ஷூ" மற்றும் சாக்ஸ் விநியோகிக்கப்படும் என்பன உள்ளிட்ட அறி விப்புகளையும், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார்.


"பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை பணிகளில் தவறு செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை" - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உறுதி

பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை பணிகளில் தவறு செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தனிப்பிரிவு உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உறுதி அளித்தார். பேரவையில், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில், எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் பேசியபோது குறுக்கிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தவறு செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் தனி பிரிவு உருவாக்க உள்ளதாக தெரிவித்தார்.


தொடர்புடைய செய்திகள்

இந்தி திணிப்பு : அதிமுக, திமுக உறுப்பினர்களுக்கு இடையே காரசாரமான வாக்குவாதம்

இந்தி திணிப்பை எதிர்ப்பது குறித்து தமிழக சட்டப்பேரவை அதிமுக மற்றும் திமுக உறுப்பினர்களுக்கு இடையே காரசாரமான வாக்குவாதம் நடைபெற்றது...

43 views

துரைமுருகன் பேச்சால் சட்டப்பேரவையில் சிரிப்பலை

சட்டப்பேரவையில் பட்ஜெட் உரை மீதான விவாதங்களுக்கு பதிலளித்து துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பேசும்போது, வரவு செலவு விவரங்கள், கடன் அளவுகள் குறித்து திமுக மற்றும் அதிமுக ஆட்சி செயல்பாடுகள் குறித்து ஒப்பீடு செய்து பேசினார்.

1299 views

சட்டமன்ற கூட்டத்தொடர் நிறைவு - நடந்தது என்ன?

எவ்வளவு நேரம் விவாதம்? அதிகம் கேள்வி கேட்டது யார்? அதிகம் பதிலளித்தது யார்?

311 views

சட்டப்பேரவையில் திமுக எம்.எல்.ஏ. சவாலை ஏற்ற அமைச்சர்

பொது விநியோகக் கடைகளின் தன்னுடன் சேர்ந்து ஆய்வு நடத்த தயாரா என தி.மு.க எம்.எல்.ஏ விடுத்த சவாலை அமைச்சர் காமராஜ் ஏற்றுக் கொண்டார்

1410 views

பிற செய்திகள்

சந்திரகிரகணம் - காண திரண்ட மக்கள் : பிர்லா கோளரங்கில் சிறப்பு ஏற்பாடு

சந்திரகிரகணத்தை ஒட்டி, சென்னை பிர்லா கோளரங்களில் சந்திரகிரகண காட்சிகளைக் காண ஏராளமானோர் திரண்டுள்ளனர்.

44 views

ராஜகோபால் தனியார் மருத்துவமனை​யில் அனுமதி - வடபழனி தனியார் மருத்துவமனையில் ராஜகோபாலுக்கு சிகிச்சை

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சரவண பவன் உரிமையாளர் ராஜகோபால் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

10 views

"குழந்தையை கடத்தியதற்கான காரணம் தெரியவில்லை" - முருகன், டி.எஸ்.பி.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மாயமான 3 வயது குழந்தை, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

40 views

"தமிழக அரசால் நீட் தேர்வுக்கு விலக்கு பெற முடியவில்லை - "டி.டி.வி.தினகரன்

மத்திய அரசோடு சுமூக உறவு வைத்திருப்பதாக கூறும் தமிழக அரசால் நீட் தேர்வுக்கு விலக்கு பெற முடியவில்லை என்று அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

12 views

வனப்பகுதியில் இருந்து வழிதவறி சென்ற பெண் புள்ளிமான் - மானை மீட்டு சிகிச்சை அளித்து வரும் வனத்துறை

கோபிசெட்டிபாளையம் பகுதியில் கம்பிவேலியில் சிக்கித்தவித்த பெண் புள்ளி மானை வனத்துறையினர் மீட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

14 views

"நீட் மசோதா விவகாரத்தில் தமிழக அரசு நாடகம்" - வைகோ, மதிமுக பொதுச் செயலாளர்

நீட் விவகாரத்தில், தமிழக அரசு நாடகம் ஆடுவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.