ராஜகோபால் வழக்கு - உச்சநீதிமன்றத்தில் புதிய மனு
பதிவு : ஜூலை 08, 2019, 03:21 PM
சாந்தகுமார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று ஜாமீனில் உள்ள சரவணபவன் அதிபர் ராஜகோபால் சரணடைவதற்கான கெடு முடிந்த நிலையில், அவர் தரப்பில் புதிய மனு ஒன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
* சரவண பவன் ஓட்டலில் வேலை பார்த்து வந்த உதவி மேலாளர் மகள் ஜீவஜோதி. ஏற்கனவே 2 மனைவிகள் உள்ள நிலையில் மூன்றாவதாக ஜீவஜோதியை திருமணம் செய்ய விரும்பினார் சரவண பவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபால். ஆனால் ஜீவஜோதி ஏற்கனவே பிரின்ஸ் சாந்தகுமாரை காதலித்து வந்த நிலையில், அவரையே திருமணமும் செய்து கொண்டார். 

* ஜீவஜோதியை திருமணம் செய்து கொண்டால் செல்வம் கொழிக்கும் என்ற ஜோதிடர்கள் பேச்சைக் கேட்டு ராஜகோபால், எப்படியும் அவரை அடைய திட்டமிட்டார். இதையடுத்து சாந்தகுமாரை அழைத்து பல முறை மிரட்டிய அவர், இறுதியில் கடந்த 2001 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26ஆம் தேதி அவரை கடத்தினார். 

* கணவரை காணவில்லை என கூறி வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்த ஜீவஜோதி, அவரை ராஜகோபாலின் ஆட்கள் கடத்திச் சென்றதாகவும் குற்றம் சாட்டினார். இந்த நிலையில் 5 நாட்களுக்கு பிறகு கொடைக்கானலில் பிரின்ஸ் சாந்தகுமாரின் உடல் கைப்பற்றப்பட்டது

* இதுதொடர்பாக ராஜகோபால், அவரது ஓட்டலில் வேலை பார்த்த ஊழியர்கள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், கடந்த 2004 ஆம் ஆண்டு ராஜகோபாலுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் அபராதமும் விதிக்கப்பட்டது.

* வழக்கில் தொடர்புடைய மற்ற 8 பேருக்கு 7 முதல் 9 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்தது பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம். இதனை எதிர்த்து ராஜகோபால் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், ராஜகோபாலுக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறைத் தண்டனையை, ஆயுள் தண்டனையாக மாற்றி உத்தரவிட்டது. 

* ஜாமீனில் வெளியே வந்த ராஜகோபால், உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ஆனால் உயர்நீதிமன்றம் அளித்த, ஆயுள் தண்டனையை, உறுதி செய்து கடந்த மார்ச் மாதம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

* மேலும் ஜூலை 7 ஆம் தேதிக்குள் பூந்தமல்லி சிறப்பு  நீதிமன்றத்தில் ராஜகோபால் சரணடைந்து சிறைக்கு செல்ல வேண்டும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. நேற்று மாலையோடு ராஜகோபால் சரணடைவதற்கான கெடு முடிந்த நிலையில், அவருக்கு உடல்நிலை சரியில்லை என காரணம் கூறப்பட்டது.

* நீதிமன்றத்தில் ஆஜராக முடியாத அளவிற்கு ராஜகோபாலின் உடல் நிலை பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், உடல்நிலையை கருத்தில் கொண்டு அவரது தண்டனை காலத்தை மருத்துவமனையில் கழிக்க அனுமதி அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

* இந்த மனு மீதான விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்துள்ளது, உச்சநீதிமன்றம்.
பிற செய்திகள்

வருமான வரித் தாக்கல் செய்ய கடைசி தேதி ஜூலை 31 - வருமான வரி ஆணையர் என்.ரங்கராஜ்

தனிநபர்கள் ஜூலை 31 ஆம் தேதிக்குள் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் என வருமான வரித்துறை ஆணையர் ரங்கராஜ் கூறியுள்ளார்.

4 views

பொறியியல் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு குறைந்துள்ளது - அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர்

பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வில், இதுவரை 48 ஆயிரத்து 850 இடங்கள் நிரம்பியுள்ள நிலையில், இன்னும் ஒரு லட்சத்து 25 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளன.

5 views

சொத்துக்களை பறித்த மகள்கள் - மீட்டு ஒப்படைத்த கோட்டாட்சியர்...

மதுரை அருகே முதியோர் இல்லத்தில் பெற்றோரை விட்டதால் 2 மகளிடமிருந்து சொத்துக்களை மீட்டு வயதான தம்பதியினரிடம் கோட்டாட்சியர் ஒப்படைத்தார்.

36 views

பாலாற்றில் உள்ள தடுப்பணைகளை உயர்த்தும் ஆந்திர அரசை எச்சரிக்க வேண்டும் - ராமதாஸ்

பாலாற்றின் குறுக்கே சட்டவிரோதமாக 21 தடுப்பணைகளை கட்டியுள்ள ஆந்திர அரசு, இப்போது அவற்றின் உயரத்தை அதிகரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

20 views

பாலாற்றில் உள்ள அணைகளை உயர்த்தும் ஆந்திர அரசு : தடுத்து நிறுத்த தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை

பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்ணையை உயர்த்தும் பணியில் ஆந்திர அரசு ஈடுபட்டுள்ளதால் திருவண்ணாமலை உள்ளிட்ட 5 மாவட்டங்கள் பாலைவனம் ஆகும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

11 views

கடலூர், நாகையில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி...

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கத்தின் சார்பில் பல ஊர்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.