நோயாளியை குப்பைக் கூளத்தில் படுக்க வைத்த மருத்துவமனை - பொதுமக்கள் அதிருப்தி
பதிவு : ஜூலை 08, 2019, 03:05 AM
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளி ஒருவர் குப்பைக் கூளத்தில் படுக்க வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, தமிழகம் மட்டுமல்லாது, கேரளாவில் இருந்தும்  நோயாளிகள், கர்ப்பிணிகள் வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.இந்த நிலையில் மதுரையை சேர்ந்த சங்கர் நாராயணன் என்பவர் ஒரு மாதத்துக்கு முன் பாம்பு கடி சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். உறவினர்கள்  யாரும் இல்லாததால் தனியாக சிகிச்சை பெற்று வந்த அவருக்கு,  உடல் மற்றும் கை கால்களில் புண் ஏற்பட்டுள்ளது.அதற்கு சிகிச்கை அளித்த செவிலியர்கள், அவரை, கழிவு நீர் செல்லும் பாதையில் குப்பைக் கூளங்களில் படுக்க வைத்ததாகக் கூறப்படுகிறது.அவரது நிலையை கண்டு பரிதாபப்பட்ட மக்கள், மருத்துவர்களிடம் சொல்லியும் நடவடிக்கை இல்லை என அதிருப்தி அடைந்துள்ளனர்.இது குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

மதகு உடைப்பு - நீரை சேமிக்க முடியாததால் விவசாய பாதிப்பு

பெரியகுளம் வடகரை பகுதியில் உள்ள ஆண்டி குளத்தில் மதகு சேதமடைந்துள்ளதால், மழை நீரை 50 நாட்கள் கூட தேக்கி வைக்க முடியவில்லை என விவசாயிகள் வேதனை.

36 views

காவல் நிலையத்தில் டிக் - டாக் : இளைஞர் கைது

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே கண்டமனூர் காவல்நிலையத்தில் வீடியோ எடுத்து டிக் டாக் செயலியில் பதிவேற்றம் செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

143 views

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை மற்றும் மிதமான மழை

தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்தது.

493 views

பிற செய்திகள்

கிருஷ்ணகிரி அருகே சுமார் 2,500 ஆண்டு பழமையான கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு

கிருஷ்ணகிரி அருகே சுமார் 2 ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமையான கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

14 views

ஸ்டெர்லைட் ஆலையை மூட துப்பாக்கி சூடு காரணமா? - மாசு கட்டுப்பாட்டு வாரியம் திட்டவட்டமாக மறுப்பு

துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு பின் ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டதாக கூறுவது தவறு என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

18 views

காவல்துறையினர் வரதட்சணை வாங்கக் கூடாது - டி.ஜி. பி. ஜே.கே. திரிபாதி

காவல்துறையினர் பரிசுப் பொருட்கள் மற்றும் வரதட்சணை வாங்கக் கூடாது என டி.ஜி. பி. ஜே.கே. திரிபாதி சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.

15 views

ஆர்.டி.ஐ சட்டத் திருத்த மசோதா தகவல் அறியும் உரிமையை நீர்த்துப் போகச் செய்யும் - டி.டி.வி.தினகரன்

ஆர்.டி.ஐ சட்டத் திருத்த மசோதா தகவல் அறியும் உரிமையை நீர்த்துப் போகச் செய்யும் என்று டி.டி.வி.தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

14 views

முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை - திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்

தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி அவரது கணவர் உள்ளிட்ட மூன்று பேர் படுகொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

41 views

சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் - பூங்கோதை

நெல்லையில் வீட்டில் இருந்த திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட 3 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.