கோடை காலத்திலும் வற்றாத 'நல்ல தண்ணீர் குளம்'...
பதிவு : ஜூலை 07, 2019, 06:24 PM
தமிழகம் முழுவதும் வறட்சியால் தண்ணீர் பற்றாக்குறை நிலவும் சூழலில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு குளத்தில் தண்ணீர் நிரம்பி வழிகிறது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அரியலூர் மாவட்டம் சாத்தமங்கலத்தில் உள்ள குளத்தில் தற்போதும் தண்ணீர் நிரம்பி வழிகிறது. அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சாத்தமங்கலத்தில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் உள்ள குளம்தான் 'நல்ல தண்ணீர் குளம்'. இந்தக் குளத்தில் கடந்த 3 ஆண்டுகளாக தண்ணீர் வற்றவே இல்லை. கரையைத் தொட்டபடி ததும்பி நிற்கும் நீர், மக்களின் தேவைகளை பூர்த்தி செய்கிறது. குடிநீர் தேவையைத் தவிர குளிப்பது முதல் கால்நடைகளின் தேவை வரை அனைத்துக்கும் இந்தக் குளத்து நீரையே கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு, இந்தக் குளமும் கோடையில் வறண்டு கிடந்தது. அப்போது, மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதியளிப்புத் திட்டத்தின்கீழ் இக்குளத்தை தூர்வாரும் பணிமேற்கொள்ளப்பட்டது. கிடைத்தவாய்ப்பை நன்கு பயன்படுத்திக்கொண்டு சிறப்பாக பணியாற்றிய கிராம மக்கள், குளத்தை போதுமான அளவுக்கு தூர்வாரினர். மேலும் கரையைப் பலப்படுத்தினர். கரையைச் சுற்றிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றியதுடன், குளத்தில் சீமைக்கருவேல மரங்கள் உள்ளிட்ட எதுவும் முளைக்காமல் பார்த்துக்கொண்டனர். அத்துடன், குளத்தின் கரையில் மரக்கன்றுகள் நட்டு வைத்துப் பராமரித்து வருகின்றனர். இவற்றின் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக கோடையிலும் தண்ணீர் வற்றாமல் இருக்கிறது. இந்தக் குளத்தில். மழைக் காலங்களில் அப்பகுதியில் பெய்யும் மழை நீர் முழுவதும் குளத்தைச் சென்றடையும் விதமாக வழி செய்துள்ளனர். இதனால், எப்போதும் தண்ணீர் குறையாமல் உள்ளது. இதனால், இந்த கிராமத்தில் தண்ணீர் தட்டுப்பாடு என்ற பிரச்சினையே இல்லை. ஊராட்சி சார்பில் மக்களுக்கு போதுமான குடிநீர் வழங்கப்படுகிறது. மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி நிரம்பி வழியும் பட்சத்தில் அந்தத் தண்ணீரும் குளத்தைச் சென்றடையும் வகையில் வழி செய்யப்பட்டுள்ளது. தண்ணீருக்காக பல கிலோமீட்டர் நடந்தும், வாகனங்களில் எடுத்து வந்தும், விலை கொடுத்து வாங்கியும் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், சாத்தமங்கலம் மக்களின் செயல் தமிழகத்துக்கே முன்னுதாரணமாக விளங்குகிறது.

தொடர்புடைய செய்திகள்

அரியலூரில் 'தினத்தந்தி' கல்வி நிதி வழங்கும் விழா

அரியலூரில், தினத்தந்தி கல்வி நிதி வழங்கும் விழா நடைபெற்றது.

59 views

அரியலூரில் டைனோசர் அருங்காட்சியகம் : தமிழக அரசு தகவல்

அரியலூரில் டைனோசர் அருங்காட்சியகம் விரைவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியால் திறந்து வைக்கப்படும் என்று தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

137 views

பிற செய்திகள்

சந்திரகிரகணம் - காண திரண்ட மக்கள் : பிர்லா கோளரங்கில் சிறப்பு ஏற்பாடு

சந்திரகிரகணத்தை ஒட்டி, சென்னை பிர்லா கோளரங்களில் சந்திரகிரகண காட்சிகளைக் காண ஏராளமானோர் திரண்டுள்ளனர்.

57 views

ராஜகோபால் தனியார் மருத்துவமனை​யில் அனுமதி - வடபழனி தனியார் மருத்துவமனையில் ராஜகோபாலுக்கு சிகிச்சை

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சரவண பவன் உரிமையாளர் ராஜகோபால் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

12 views

"குழந்தையை கடத்தியதற்கான காரணம் தெரியவில்லை" - முருகன், டி.எஸ்.பி.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மாயமான 3 வயது குழந்தை, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

47 views

"தமிழக அரசால் நீட் தேர்வுக்கு விலக்கு பெற முடியவில்லை - "டி.டி.வி.தினகரன்

மத்திய அரசோடு சுமூக உறவு வைத்திருப்பதாக கூறும் தமிழக அரசால் நீட் தேர்வுக்கு விலக்கு பெற முடியவில்லை என்று அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

15 views

வனப்பகுதியில் இருந்து வழிதவறி சென்ற பெண் புள்ளிமான் - மானை மீட்டு சிகிச்சை அளித்து வரும் வனத்துறை

கோபிசெட்டிபாளையம் பகுதியில் கம்பிவேலியில் சிக்கித்தவித்த பெண் புள்ளி மானை வனத்துறையினர் மீட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

14 views

"நீட் மசோதா விவகாரத்தில் தமிழக அரசு நாடகம்" - வைகோ, மதிமுக பொதுச் செயலாளர்

நீட் விவகாரத்தில், தமிழக அரசு நாடகம் ஆடுவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.