காணாமல் போன முகிலன் கண்டுபிடிக்கப்பட்டார் : திருப்பதியில் போலீசார் அழைத்து சென்ற காட்சி வெளியானது
பதிவு : ஜூலை 07, 2019, 02:11 AM
காணாமல்போன சமூக செயற்பாட்டாளர் முகிலனை திருப்பதியில் மீட்ட ஆந்திர போலீசார் காட்பாடியில், தமிழக சி.பி.சி.ஐ.டி போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கடந்த ​பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து மதுரைக்கு சென்ற முகிலன் திடீரென மாயமானார். இதை தொடர்ந்து முகிலனை மீட்கவேண்டும் என அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் என பல்வேறு தரப்பினரும் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்த வழக்கை ரயில்வே போலீசாரும் , எழும்பூர் போலீசாரும் விசாரித்து வந்த‌ நிலையில், முன்னேற்றம் ஏதும் ஏற்படாத‌தால், வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில், முகிலனை திருப்பதி ரயில் நிலையத்தில் மூன்று காவலர்கள் அழைத்து செல்வது போன்ற காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியானது. இது உறுதி செய்யப்பட்டதால், முகிலனை தங்களிடம் ஒப்புடைக்குமாறு தமிழக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்துள்ளனர். 

தமிழக போலீசாரிடம் முகிலன் ஒப்படைப்பு : முகிலன் ஆதரவாளர்கள் முழக்கம் - பரபரப்பு 



இதனையடுத்து, திருப்பதியில் இருந்து காட்பாடி ரயில்நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட முகிலனை, தமிழக போலீசாரிடம்  ஆந்திர போலீசார் ஒப்படைத்துள்ளனர். அங்கிருந்து போலீசார் முகிலனை அழைத்து சென்றபோது, அவரின் ஆதரவாளர்கள் சூழ்ந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. முகிலனை விடுவிக்க கோரி அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர். 

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

1434 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4832 views

பிற செய்திகள்

சந்திரகிரகணம் - காண திரண்ட மக்கள் : பிர்லா கோளரங்கில் சிறப்பு ஏற்பாடு

சந்திரகிரகணத்தை ஒட்டி, சென்னை பிர்லா கோளரங்களில் சந்திரகிரகண காட்சிகளைக் காண ஏராளமானோர் திரண்டுள்ளனர்.

47 views

ராஜகோபால் தனியார் மருத்துவமனை​யில் அனுமதி - வடபழனி தனியார் மருத்துவமனையில் ராஜகோபாலுக்கு சிகிச்சை

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சரவண பவன் உரிமையாளர் ராஜகோபால் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

10 views

"குழந்தையை கடத்தியதற்கான காரணம் தெரியவில்லை" - முருகன், டி.எஸ்.பி.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மாயமான 3 வயது குழந்தை, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

42 views

"தமிழக அரசால் நீட் தேர்வுக்கு விலக்கு பெற முடியவில்லை - "டி.டி.வி.தினகரன்

மத்திய அரசோடு சுமூக உறவு வைத்திருப்பதாக கூறும் தமிழக அரசால் நீட் தேர்வுக்கு விலக்கு பெற முடியவில்லை என்று அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

14 views

வனப்பகுதியில் இருந்து வழிதவறி சென்ற பெண் புள்ளிமான் - மானை மீட்டு சிகிச்சை அளித்து வரும் வனத்துறை

கோபிசெட்டிபாளையம் பகுதியில் கம்பிவேலியில் சிக்கித்தவித்த பெண் புள்ளி மானை வனத்துறையினர் மீட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

14 views

"நீட் மசோதா விவகாரத்தில் தமிழக அரசு நாடகம்" - வைகோ, மதிமுக பொதுச் செயலாளர்

நீட் விவகாரத்தில், தமிழக அரசு நாடகம் ஆடுவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.