கர்நாடகாவில் 11 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா - கூட்டணி ஆட்சி கவிழுமா ?
பதிவு : ஜூலை 06, 2019, 04:17 PM
கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதள எம்.எல்.ஏக்கள் 11 பேர் ஆளுநரை சந்தித்து தங்களது ராஜினாமா கடிதங்களின் நகல்களை வழங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், 39 இடங்களை பெற்ற மதசார்பற்ற ஜனதாதளம், காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது.இதனிடையே, ராமலிங்கரெட்டி, ரமேஷ் ஜார்கிகோளி உள்ளிட்ட கர்நாடகாவின் முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் அதிருப்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.  இதே போல், மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் 3 எம்.எல்.ஏக்களும், அதிருப்தியில் இருந்தனர். இந்நிலையில், 11 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்வதாக கடிதத்தை சபாநாயகர் அலுவலகத்தில் கொடுத்தனர். தற்போது வரை இந்த கூட்டணி ஆட்சியில் இருந்து 11 எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் கொடுத்துள்ளனர். மேலும் 2 பேர் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சபாநாயகரை சந்தித்த பிறகு, 11 எம்.எல்.ஏக்களும் ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடித நகல்களை வழங்கியுள்ளனர்.ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டால், ஆட்சி கவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இது ஒருபுறமிருக்க மற்றொருபுறம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் எடியூரப்பா தற்போதைய அரசியல் நகர்வுகளின் எதிரொலியாக பா.ஜ.க.  எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்த அழைப்பு விடுத்துள்ளார்.கர்நாடக முதல்வர் குமாரசாமி வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் இந்த அரசியல் நிகழ்வுகள் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அமெரிக்கா சென்றுள்ள கர்நாடக முதல்வர் குமாரசாமி நாளை மறுநாள் கர்நாடகா திரும்ப உள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.