பசுமையை மீட்டெடுக்க 500 இளைஞர்களுடன் பசுமை வேட்டவலம் என்ற அமைப்பு துவக்கம்...
பதிவு : ஜூலை 06, 2019, 02:32 PM
திருவண்ணாமலையில் உள்ள வேட்டவலம் பகுதியில் பசுமையை மீண்டும் செழிக்க செய்ய 500 இளைஞர்களுடன் பசுமை வேட்டவலம் என்ற அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை அடுத்த வேட்டவலம் என்ற பகுதி, அதிகளவு மரங்கள் கொண்டிருந்த பகுதியாக இருந்து வந்துள்ளது. காலப்போக்கில் மனிதர்களின் அலட்சியத்தாலும், குடியிருப்புகளின் பெருக்கத்தாலும் மரங்கள் வெட்டப்பட்டு பசுமை இழந்த பகுதியாக மாறி வருகிறது. மேலும், தமிழகம் முழுவதும் மழையின் அளவு வெகுவாக குறைந்து தண்ணீர் தட்டுப்பாடும் நிலவி வருகிறது. எனவே இழந்த பசுமையை மீட்டெடுப்பதற்காகவும், தண்ணீர் தட்டுப்பாட்டை போக்கி, வருங்கால சந்ததியினருக்கு தேவையான குடிநீர் கிடைக்கும் வகையில் மழை பெய்ய செய்யவும், மரங்களை வளர்த்து, பாதுகாக்கும் நோக்கத்தோடு பசுமை வேட்டவலம் என்ற அமைப்பு துவக்கப்பட்டது. இந்த அமைப்பில் சுமார் 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சேர்ந்துள்ளனர். வேட்டவலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சுமார் 50 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு, அவற்றை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், உத்வேகமாக இந்த குழு தற்போது செயல்பட தொடங்கியுள்ளது. 

பிற செய்திகள்

தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் நியமனத்திற்கு, உயர்நீதிமன்றம் விதித்த தடை நீக்கம் - உச்சநீதிமன்றம்

தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் நியமனத்திற்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை விதித்த இடைக்கால தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

7 views

பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

18 views

கோயில் உண்டியலை தூக்கிச்சென்று பணம் கொள்ளை : சிசிடிவி - கைரேகை பதிவு அடிப்படையில் போலீசார் விசாரணை

பழனி அருகே வேலம்பட்டியில், கோயில் உண்டியலை மர்மநபர்கள் தூக்கிச்சென்று, கொள்ளையடித்துள்ளனர்.

19 views

குடிநீர் தேவைக்காக அமராவதி அணையிலிருந்து நீர் திறப்பு...

உடுமலை அருகே உள்ள அமராவதி அணையிலிருந்து குடிநீருக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

24 views

உயர்மின் அழுத்தகோபுரம், எரிவாயு குழாய்பதிக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு : கோவை உள்பட 5 மாவட்ட விவசாயிகள் பங்கேற்பு

தமிகத்தில் விவசாய நிலங்களில் உயர்மின் அழுத்த கோபுரங்கள் அமைக்கும் திட்டத்தை எதிர்த்து டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

8 views

நிர்மலா சீதாராமனுடன் பன்னீர்செல்வம் சந்திப்பு

டெல்லி சென்றுள்ள துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார்.

30 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.