சிறு நகரமாகவே நீடிக்கும் நாகர்கோவில் மாநகராட்சி... தரம் உயர்த்தப்பட்டும் மாறாத மாநகரம்
பதிவு : ஜூன் 25, 2019, 07:51 PM
கன்னியாகுமரி மாவட்டத்தின், நாகர்கோவில் கடந்த பிப்ரவரி மாதம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தின், நாகர்கோவில் கடந்த பிப்ரவரி மாதம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. ஆனால் மாற்றம் பெயரளவுக்குத்தான் என்றும், நகரத்தின் அடிப்படை வசதிகள் எதுவும் மேம்படவில்லை என்றும் கூறப்படுகிறது. 

கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவில், கடந்த பிப்ரவரி மாதம் 52 வார்டுகளை கொண்ட மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. ஆனால் இதர மாநகரங்களில் உள்ள அளவுக்கு இங்கு மக்கள் தொகை இல்லை என்றும், மாற்றம் பெயரளவுக்குத்தான் என்றும் மக்கள் கூறுகின்றனர். மாநகராட்சியாக தரம் உயர்ந்த பின்னும், சிறு நகரத்தில் சாயலிலேயே  நகரம் உள்ளதாக மாநகர மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். தொழில் வளர்ச்சி, உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து நெரிசலை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் மக்கள் முன்வைக்கின்றனர்.

2012 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டம், தற்போது வரை முழுமை பெறவில்லை. இதற்காக தோண்டப்பட்ட குழிகள் சரியாக மூடாததால், முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக மக்கள் கூறுகின்றனர். திருநெல்வேலி- திருவனந்தபுரம் புறவழிச்சாலை திட்டம் 10 ஆண்டுகளாக நடந்து வருவதால், நகரின் பிரதான சாலைகளை வழியாகவே அனைத்து வாகனங்களும் செல்கின்றன. அதனால் எந்நேரமும் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. நாகர்கோவில் மாநகரம்...

வீடுகளின் கழிவு நீரை மக்கள் பல ஆண்டுகளாகவே ஆறுகளிலும், கால்வாய்களிலும் விட்டு வருவதால் அதை தடுக்க திட்டங்கள் உருவாக்கவில்லை. அதற்கு உதாரணமாக கிருஷ்ணன்கோயில் பகுதியில் உள்ள சுப்பையார்குளத்தைச் சொல்லலாம். 15 ஆண்டுகளுக்கு முன் வரை மக்கள் பயன்படுத்தி வந்த அந்த குளம், முறையான பராமரிப்பு இன்றி தற்போது சாக்கடை குளமாக மாறி சுகாதார சீர்கேட்டை உருவாக்கி வருகிறது. நகர மக்களின் குடிநீர் தேவைகளை நிறைவேற்றி வந்த முக்கடல் அணை, பேச்சிப்பாறை அணைகளில் தற்போது நீர் இருப்பு இல்லை என்பதால் நகரத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.  பல பகுதிகளுக்கு 20 நாட்களுக்கு ஒரு முறைதான் தண்ணீர் கிடைக்கும்  நிலை ஏற்பட்டுள்ளது.

புறநகரப் பகுதியான பறக்கின்கால், 20 ஆண்டுகளாக எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத பகுதியாகவே நீடித்து வருகிறது. குடிநீர், சாலை, தெருவிளக்கு, சுகாதாரம் போன்ற அடிப்படை தேவைகள் அடியோடு மறுக்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர். தற்போதைய நிலையில் நாகர்கோவில் மாநகராட்சி அடிப்படை வசதிகள் இல்லாத நகரமாகவே நீடித்து வருகிறது. மத்திய மாநில அரசுகள் அதிக நிதி ஒதுக்கீடு செய்து அடிப்படை வசதிகளை மேம்படுத்தினால் மட்டுமே மாநாகராட்சியாக அடையாளம் பெறும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

7683 views

ஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

1685 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4865 views

பிற செய்திகள்

காவிரி விவகாரம் - திமுக மீது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு

பல ஆண்டுகளாக மத்தியில் அதிகாரத்தில் இருந்த திமுக தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண தவறி விட்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டினார்.

5 views

சானிட்டரி நாப்கின்கள் தயாரிக்கும் தொழில் மையம் துவக்கம்

சானிட்டரி நாப்கின்கள் தயாரிக்கும் தொழில் மையம் சென்னையில் தொடங்கப்பட்டது.

8 views

பள்ளி மாணவன் மீது தனியார் பேருந்து மோதி விபத்து

ஓமலூர் அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதியதில் ஆறாம் வகுப்பு மாணவனின் இரண்டு கால்களும் நசுங்கியதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அதனை சிறை பிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

7 views

டெல்லி முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித் காலமானார்

டெல்லி முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஷீலா தீட்சித் காலமானார்.

141 views

சாலையை கடந்து சென்ற புலி - வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை

தாளவாடியில் இருந்து தலமலை செல்லும் சாலையில் புலிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் இருசக்கரவாகனத்தில் செல்பவர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.

19 views

இரு மாநில ஆளுநர்களை இடமாற்றம் செய்தும் மத்திய அரசு அதிரடி அறிவிப்பு

இரு மாநில ஆளுநர்களை இடமாற்றம் செய்தும் சில மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களையும் மத்திய அரசு நியமித்துள்ளது.

117 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.