மாணவியை கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் : நண்பர் உள்பட 2 பேரிடம் விசாரணை...
பதிவு : ஜூன் 25, 2019, 10:46 AM
மாணவியை கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த போலீஸ் நண்பர் உள்பட 2 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் துறைமுக பகுதியை சேர்ந்த 10-ஆம் வகுப்பு மாணவி கடந்த  13-ஆம் தேதி மாயமானார்.  இதுகுறித்து  மாணவியின் தாயார் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடி வந்துள்ளனர். இந்நிலையில், குரும்பனையை சேர்ந்த சுஜின் என்பவர் மாணவியை ஊரில் கொண்டு வந்து விட்டுவிட்டு, எதுவும் தெரியாதது போல சென்று விட்டார். நடந்த சம்பவம் குறித்து மாணவி பெற்றோரிடம் தெரிவிக்கவே, இதுதொடர்பாக குளச்சல் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில், மாணவி தெரிவித்ததை கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து சுஜினை பிடித்து மகளிர் போலீசார் நடத்திய விசாரணையில், தனது நண்பர் ஷாம் பிண்டோவுடன், மாணவியை வேளாங்கண்ணிக்கு அனுப்பி வைத்ததையும், பின்னர் அங்கு சென்று மிரட்டி கூட்டுப் பலாத்காரம் செய்ததையும் ஒப்புக் கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து கொல்கத்தா அழைத்து சென்றதாகவும், பின்னர் பணம் இல்லாத நிலையில் ஊருக்கு அழைத்து வந்து விட்டதாகவும் விசாரணையில் சுஜின் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து கூடங்குளம் பகுதியில் மறைந்திருந்து மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்த ஷாம் பிண்டோவை கைது செய்த போலீசார், சுஜினிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவியை சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் போலீசார் அனுமதித்துள்ளனர். மாணவியை கடத்தி சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நாகர்கோவில் : கடன் வாங்கியவர் தீக்குளிப்பு - கடன் கொடுத்தவர் பலி

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அடுத்த ராமன்புதூரில் சுய உதவி குழுவில் பணியாற்றி வரும் அம்பிகா என்பவர், தங்கம் என்பவருக்கு 4 லட்சம் ரூபாய் கடனாக கொடுத்துள்ளார்.

1698 views

பள்ளி மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் : புகார் அளித்ததால் பலாத்கார வீடியோ வெளியீடு

கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி மாணவியை ஆபாச படம் எடுத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

654 views

களைகட்டியது குளச்சல் மீன்பிடி துறைமுகம்...

புயல் எச்சரிக்கை குறித்து முறையான அறிவிப்பு வெளியிடப்படாததால், கன்னியாகுமரியில் 10 நாட்களுக்கு பிறகு மீண்டும் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றுள்ளனர்.

148 views

பிற செய்திகள்

ஸ்ரீ வேம்புலியம்மன் கோயிலில் ஆடி திருவிழா : அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அம்மன் வீதியுலா

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள ஸ்ரீ வேம்புலியம்மன் கோயிலில் ஆடித் திருவிழாவையொட்டி 501 பெண்கள் பால்குடம் ஏந்தி ஊர்வலமாக கோயிலுக்கு சென்று விளக்கு பூஜை செய்தனர்.

19 views

பிளாஸ்டிக் தடை - அதிகாரிகள் ஆய்வு : ரூ.4 லட்சம் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள கடைகளில் நகராட்சி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

7 views

முல்லைப் பெரியாறு : கேரள அரசு மீது தமிழக அரசு தொடர்ந்த வழக்கு - பதில் மனுத்தாக்கல் செய்ய 2 வாரம் அவகாசம் கோரிய கேரளா

முல்லைப் பெரியாறு அணையில் வாகன நிறுத்துமிடம் அமைக்கும் கேரள அரசின் முடிவுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கின் மீது பதில் மனு தாக்கல் செய்ய கேரள அரசு 2 வார காலம், அவகாசம் கோரி உள்ளது.

11 views

நாடு முழுவதும் நாச வேலைகளில் ஈடுபட திட்டம் : கைதான 16 பேருக்கு 8 நாட்கள் போலீஸ் காவல்

நாச ​வேலைகளில் ஈடுபட முயன்றதாக கைதான 16 பேரையும், 8 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க பூந்தமல்லி என்.ஐ.ஏ நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

33 views

குரங்கு அருவியில் கொட்டும் தண்ணீர் : சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் ஆழியாறு அணைக்கு மேல்பகுதியில் உள்ள குரங்கு அருவியில் 3 மாதத்திற்க்கு பிறகு தண்ணீர் கொட்டுகிறது .

22 views

"பேஸ்புக், வாட்ஸ்அப் போல புத்தகத்துக்கும் நேரம் செலவிடுங்கள்" - இளைஞர்களுக்கு தமிழக ஆளுநர் அறிவுரை

இளைஞர்கள் பேஸ்-புக், வாட்ஸ்-அப் உள்ளிட்டவைகளில் கவனம் செலுத்துவதை போல, புத்தகத்திற்கும் சிறிது நேரத்தை செலவிட வேண்டும் என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்தார்.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.