நான் விஸ்வரூபம் எடுத்தால் அழிந்து போவீர்கள் - தங்கத்தமிழ்செல்வன்
பதிவு : ஜூன் 25, 2019, 09:35 AM
டிடிவி தினகரனை திட்டியதாக வெளியான ஆடியோ தவறானது என தங்கதமிழ் செல்வன் விளக்கம் அளித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பின், தங்கதமிழ்செல்வன் அதிமுகவில் இணைய போவதாக தகவல்கள் வெளியாகின. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ ஆகியோர் தங்கதமிழ்செல்வன், அதிமுகவிற்கு வந்தால் வரவேற்போம் என தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தந்தி டிவியின் கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் பங்கேற்ற தங்கதமிழ்செல்வன், தினகரன் செயல்பாடுகள் மீது தமது அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார். இதனிடையே தினகரன் உதவியாளரிடம், அவர் பேசுவது போல் வெளியான ஆடியோ ஒன்று,  அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த ஆடியோவில், இந்த மாதிரி அரசியலை, தினகரன் உடனே நிறுத்த வேண்டும் என்றும், இதே நிலை நீடித்தால் அவர் தோற்றுப்போவார் எனவும் கூறியுள்ளார். மேலும்,  நான் விஸ்வரூபம் எடுத்தால் அழிந்து போய்விடுவீர்கள் என்றும், அவர் அந்த ஆடியோவில் எச்சரித்துள்ளார். இதுகுறித்து அமமுக நிர்வாகிகள் கூறும் போது, தேனி மாவட்டத்தில், அமமுக நிர்வாகிகள் சிலர் ரகசிய கூட்டம் நடத்தியதால், தங்கதமிழ்ச்செல்வன், கோபத்தில் இப்படி பேசியிருக்கலாம் என தெரிவித்தனர்.  தற்போது கேரளாவில் இருப்பதாக கூறப்படும் தங்கதமிழ்செல்வனிடம், தொலைபேசி மூலம் நாம் தொடர்பு கொண்ட போது, தான் பேசியதாக வெளியான ஆடியோ, தவறானது என்று மறுத்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

795 views

பிற செய்திகள்

எதிர்ப்பு தெரிவிக்கும் தலைவர்கள் விவாதிக்க தயாரா ? - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சவால்

புதிய கல்விக்கொள்கை வரைவு தொடர்பாக நடிகர் சூர்யாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள், பொதுமேடையில் விவாதிக்க தயாரா என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.

7 views

தபால்துறை தேர்வு ரத்து : தமிழக எம்.பிக்கள் நன்றி

தபால்துறை தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக, நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவித்துள்ளார்.

68 views

புதிய கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யா தெரிவித்த கருத்தில் தவறில்லை - அன்புமணி ராமதாஸ்

புதிய கல்விக் கொள்கை குறித்து சூர்யா கருத்து தெரிவித்ததில் தவறில்லை என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

105 views

நியூட்ரினோ திட்டம்-சட்டசபையில் தெளிவுப்படுத்த வேண்டும் - பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை

நியூட்ரினோ திட்டம் குறித்து சட்டசபையில் அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து விவசாயிகளின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

18 views

ரஜினி அரசியலுக்கு வந்தால் ஸ்டாலின் முதல்வராக முடியாது - அர்ஜுன் சம்பத்

ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் ஸ்டாலின் முதலமைச்சராக முடியாது என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.

67 views

உணவு பொருள் அட்டைகளில் கலோரி, சர்க்கரை அளவு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தகவல்

நோய் தடுப்பு சுகாதார கல்வி குறித்து பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென்று பேரவையில் பூங்கோதை ஆலடி அருணா வலியுறுத்தியுள்ளார்.

27 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.