ஹிமாச்சல பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதியான தமிழர்
பதிவு : ஜூன் 20, 2019, 06:26 PM
மாற்றம் : ஜூன் 21, 2019, 03:22 AM
தமிழகத்தை சேர்ந்த ஒருவர் ஹிமாச்சல பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது தெலங்கானா உயர்நீதிமன்ற நீதிபதியாக உள்ள ராமசுப்ரமணியன் தமிழகத்தை சேர்ந்தவர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த இவர், 1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்து, வழக்கறிஞராக பணியை துவங்கினார். 2006ல் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்ற அவர், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் புலமை பெற்றவர். சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த போது, கலப்பு திருமணம் செய்து கொண்டவர்களுக்கு பாதுகாப்பு வழங்க மாவட்ட அளவில் குழு அமைக்க வேண்டும் என்பது உள்பட பல முக்கிய தீர்ப்புகளை வழங்கியுள்ளார். இவர் பல்வேறு கட்டுரைகள் மற்று​ம் சட்டம் நீதி குறித்த புத்தகங்களை எழுதியுள்ளார். கடந்த 2016 ஏப்ரலில் ஹைதராபாத் உயர் நீதிமன்ற நீதிபதியாக மாறுதல் பெற்ற அவர், தற்போது ஹிமாச்சல பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். நாளை அவர் பதவியேற்கும் நிலையில் அவருக்கு அந்த மாநில ஆளுநர் ஆச்சார்யா தேவ் விரத் பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

955 views

பிற செய்திகள்

டெல்லி முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித் காலமானார்

டெல்லி முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஷீலா தீட்சித் காலமானார்.

84 views

இரு மாநில ஆளுநர்களை இடமாற்றம் செய்தும் மத்திய அரசு அதிரடி அறிவிப்பு

இரு மாநில ஆளுநர்களை இடமாற்றம் செய்தும் சில மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களையும் மத்திய அரசு நியமித்துள்ளது.

63 views

பாதி எரிந்த நிலையில் மீட்கப்பட்ட16 வயது சிறுமி - போலீசார் விசாரணை

ஆந்திர மாநிலம் சித்தூரில் பாதி எரிந்த நிலையில் மீட்கப்பட்ட 16 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

14 views

சிப் பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட் விரைவில் அறிமுகம் - மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் முரளிதரன் தகவல்

கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் சிப் பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட்டுகளை விரைவில் அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

15 views

உ.பி.யில் 10 பேர் கொல்லப்பட்ட விவகாரம் - பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த பிரியங்கா காந்தி

உத்தரபிரதேசத்தில் நிலத்தகராறில் கொல்லப்பட்டவர்களின் உறவினர்களை இன்று சந்தித்த பிரியங்கா அவர்களுடன் சேர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

17 views

ஐதராபாத் : சாலையோர கிணற்றுக்குள் பாய்ந்த கார்

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில், மருத்துவர்கள் சென்ற கார் ஒன்று, சாலையோர கிணற்றில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

29 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.