காவிரி கூட்டுக்குடிநீர் குழாயில் இருந்து வீணாகும் தண்ணீர் : விரைந்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வேண்டுகோள்
பதிவு : ஜூன் 19, 2019, 01:08 AM
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சிக்கு கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் பள்ளிப்பாளையம் காவிரி ஆற்றிலிருந்து குழாய்கள் மூலம் தண்ணீர் எடுத்து செல்லப்படுகிறது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சிக்கு கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் பள்ளிப்பாளையம் காவிரி ஆற்றிலிருந்து குழாய்கள் மூலம் தண்ணீர் எடுத்து செல்லப்படுகிறது. இந்நிலையில் கிழக்கு தொட்டி பாளையம் பகுதியில் செல்லும் குழாய் பகுதியை மூடாததால் தண்ணீர் வெளியேறி வாய்க்காலில் கலந்து வீணாகிறது. இது குறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே அரசு அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு வீணாகும் காவிரி நீரை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் குழாயில் ஓட்டை : வேலூர் மாவட்டம் முழுவதும் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விட்டதால் ஆழ்துளை கிணறுகளில் இருந்து தண்ணீர் கிடைப்பதில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் வேலூர் கோட்டை அருகே ஒக்கனேக்கல் கூட்டு குடிநீர் செல்லும் குழாயில் ஓட்டை ஏற்பட்டு  தண்ணீர் கசிந்து வருகிறது. பெண்கள் கை குழந்தைகளுடன் அங்கு வந்து சிறு டம்ளர் உதவியுடன் தண்ணீரை சேகரித்து செல்கிறார்கள். ஒரு குடம் தண்ணீர் சேகரிக்க சுமார் ஒரு மணி நேரம்  பிடிப்பதாக அவர்கள் வேதனை தெரிவித்தனர் .

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.