திருமயம் அருகே ஒரே இடத்தில் 19 ஐம்பொன் சிலைகள் மீட்பு
பதிவு : ஜூன் 19, 2019, 12:43 AM
மரத்தை வெட்டும் போது ஒரே இடத்தில் புதைத்து வைக்கப் பட்டிருந்த 19 ஐம்பொன் சிலைகள் கிடைத்திருப்பது அதிகாரிகளையும் பொதுமக்களையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள பேரையூரில் நாகநாதர் சுவாமி கோயில் அருகே தனியாருக்கு சொந்தமான இடத்தில் உள்ள மரங்களை  ஜேசிபி இயந்திரம் மூலம் வெட்டும் பணி நடைபெற்றது. அப்போது ஒரு மரத்தின் அடியில் தோண்டத் தோண்ட சிலைகளாக வெளியே வரத் தொடங்கியது. தகவல் அறிந்த திருமையம் தாசில்தார் மற்றும் தொல்லியல் துறை அதிகாரிகள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பூமிக்கடியில் எடுத்த சிலைகளை சோதனை செய்தனர். 3 அம்பாள், நடராஜர், விநாயகர், கிருஷ்ணர் உள்ளிட்ட 19 சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஐம்பொன்னில் செய்யப்பட்ட அந்த சிலைகளின் தொன்மை குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

பிற செய்திகள்

சந்திரயான் 1-க்கும், சந்திரயான் 2-க்கும் இவ்வளவு இடைவெளி ஏன்...? - மயில்சாமி அண்ணாதுரை விளக்கம்

சந்திரயான் 1-க்கும், சந்திரயான் 2-க்கும் இவ்வளவு இடைவெளி ஏன்...? என்பது குறித்து இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை விளக்கம்.

26 views

எம்எல்ஏக்களுக்கு சென்னையில் அரசு சார்பில் வீடுகள் கட்டி கொடுக்கப்படும் - துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவிப்பு

எம்எல்ஏக்களுக்கு சென்னையில் அரசு சார்பில் வீடுகள் கட்டி கொடுக்கப்படும் என்று துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.

15 views

ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் மரியாதை - துணை முதல்வர் - அமைச்சர்கள் பங்கேற்பு

சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிவடைந்ததும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் இருவரும் சென்னை - மெரீனா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

13 views

மதுராந்தகம் காவல்நிலையத்தில் திடீர் சோதனை - லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அதிரடி

மதுராந்தகம் மதுவிலக்கு காவல்நிலையம் மற்றும் காவல்துறை ஆய்வாளரின் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புதுறையினர் திடீர் சோனையில் ஈடுபட்டுள்ளனர்.

12 views

தூத்துக்குடியில் தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

தூத்துக்குடியில் தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் விசைபடகு மற்றும் நாட்டுபடகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

14 views

கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்க கண்டனம் - மதிமுக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்

என்.ஐ.ஏ அமைப்பின் சட்டங்களை திருத்துவதன் மூலம் மாநில அரசின் சட்டம் ஒழுங்கு அதிகாரத்தை மத்திய அரசு பறித்துக் கொள்ள முயற்சிப்பதாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.