தமிழகத்தில் நீர்மேலாண்மைக்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்
பதிவு : ஜூன் 18, 2019, 04:37 PM
தமிழகத்தில் நீர்மேலாண்மைக்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மாநில அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கில் தமிழக அரசு இன்று பதில் மனு தாக்கல் செய்தது. அதில், தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் மீஞ்சூர், நெம்மோலி ஆலைகளில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் கீழ் 180 மில்லியன் லிட்டர் தண்ணீர் பெற்று வருவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. 

மேலும், கடல்நீரை குடிநீராக்கும் ஆலைகள் அமைப்பது குறித்தும் ஆய்வு செய்து வருவதாக பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த பதிலில் திருப்தி அடையாத நீதிபதிகள், தமிழகத்தில் நீர் மேலாண்மைக்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கண்டனத்தை பதிவு செய்தனர். தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காண எடுத்த நடவடிக்கைகள் என்ன? ஏரி, குளங்களை தூர்வாரவும் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் எடுத்த  நடவடிக்கை என்ன? மழை நீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க மேற்கொண்ட நடவடிக்கை என்ன? என அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட நீதிபதிகள் இது தொடர்பாக தமிழக அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய ஒரு வாரம் கெடு விதித்து வழக்கு விசாரணையை தள்ளி வைத்தனர். 

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

955 views

பிற செய்திகள்

பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டியதாக புகார் - தமிழகத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி சோதனை

தமிழகத்தில் சென்னை, நெல்லை, மதுரை உள்பட 7 மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் நடத்திய சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

1 views

அணை பாதுகாப்பு மசோதாவை அமல்படுத்தினால் மாநிலத்தின் உரிமைகள் பறிக்கப்படும் - ஸ்டாலின்

சட்டப்பேரவையின் நடப்பு கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைந்துள்ளது.

12 views

காவிரி விவகாரம் - திமுக மீது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு

பல ஆண்டுகளாக மத்தியில் அதிகாரத்தில் இருந்த திமுக தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண தவறி விட்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டினார்.

16 views

சானிட்டரி நாப்கின்கள் தயாரிக்கும் தொழில் மையம் துவக்கம்

சானிட்டரி நாப்கின்கள் தயாரிக்கும் தொழில் மையம் சென்னையில் தொடங்கப்பட்டது.

11 views

பள்ளி மாணவன் மீது தனியார் பேருந்து மோதி விபத்து

ஓமலூர் அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதியதில் ஆறாம் வகுப்பு மாணவனின் இரண்டு கால்களும் நசுங்கியதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அதனை சிறை பிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

7 views

டெல்லி முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித் காலமானார்

டெல்லி முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஷீலா தீட்சித் காலமானார்.

170 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.