சிதம்பரம் அருகே இருளர் சமூக சிறுவர் சிறுமியர்கள் பள்ளியில் சேர்ப்பு
பதிவு : ஜூன் 18, 2019, 12:34 AM
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தில்லைநாயகபுரம் கிராமத்தில் அரசு ஆதிதிராவிடர் நல நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே தில்லைநாயகபுரம் கிராமத்தில் அரசு ஆதிதிராவிடர் நல நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. பள்ளிக்கு செல்லாமல் இருக்கும் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புமாறு இருளர் இன மக்களிடம் பள்ளி ஆசிரியர்கள் கேட்டுக்கொண்டனர். இதனையடுத்து தில்லைநாயகபுரம் அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் 8 இருளர் இன மாணவ மாணவிகள் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் சால்வை மற்றும் மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்து வந்து பள்ளியில் சேர்த்தனர். இந்த மாணவர்களுக்காக சிறப்பு ஆசிரியர் நியமிக்கப்பட்டு பாடம் கற்பிக்கப்படுகிறது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.