சிவகங்கை அரசு மருத்துவமனை ஒப்பந்த ஊழியர்கள் மீது தாக்குதல் :ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம்
பதிவு : ஜூன் 18, 2019, 12:28 AM
சிவகங்கையில் அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் உறவினர்கள் தாக்கியதாக கூறி ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களது பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகங்கை அரசு மருத்துவமனையில் ஒப்பந்த தொழிலாளர்கள் 300 பேர் பணிபுரிகின்றனர். வார்டுகளில் பராமரிப்பு பணிக்காகவும், நோயாளிகளை இடம் மாற்றம் செய்யும் வேலைகளிலும் ஓப்பந்த ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.இந்நிலையில், வித்யாதேவி என்ற பெண் ஊழியரை, நோயாளிகளின் உறவினர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களது பணியை புறக்கணித்து மருத்துவக் கல்லூரி முதல்வர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனைத் தொடர்ந்து தங்களுக்கு பணி பாதுகாப்பு வழங்கக் கோரி மனு அளித்தனர். டீன் சமதானப்படுத்தியதை அடுத்து ஓப்பந்த தொழிலாளர்கள் பணிக்கு சென்றனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.