நேற்று சுவாதி, இன்று தேன்மொழி...தொடரும் பயங்கரம்... என்ன செய்கிறது தெற்கு ரயில்வே? ...
பதிவு : ஜூன் 17, 2019, 11:00 AM
சென்னை, சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில், கடந்த வாரம் இளம்பெண் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
சென்னை, சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில், கடந்த வாரம் இளம்பெண் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா அமைக்க நிதி ஓதுக்கப்பட்ட போதிலும், தெற்கு ரயில்வே அலட்சியம் காட்டி வருவதால், ரயில் நிலையங்களில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது.

நாடு முழுவதும் 3 ஆயிரத்து 771 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 8 ஆயிரத்து 244 ரயில் நிலையங்களிலும், 58 ஆயிரத்து 276 ரயில் பெட்டிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த ரயில்வே வாரியம் நிதி ஒதுக்கியது. 983 ரயில் நிலையங்களில், நிர்பயா நிதி மூலம்  கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.  அதன்படி தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்துக்கு உட்பட்ட 136 ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும். ரயில் நிலையங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டு, 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறை அமைத்து கண்காணிக்கப்படும் என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

2016 ஆம் ஆண்டு டிசம்பரில் இந்த பணி முடிக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்த போதிலும், மூன்று ஆண்டுகளாகியும் கேமராக்கள் பொருத்தும் பணி முடிக்கப்படவில்லை. தற்போது முக்கிய 11 ரயில் நிலையங்களில் மட்டுமே கண்காணிப்பு கேமரா உள்ளதால்,  ரயில் நிலையங்களில் பெண் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டது. நேற்று நுங்கம்பாக்கம், இன்று சேத்துப்பட்டு ,  நாளை மற்றொரு ரயில் நிலையம் என பாதுகாப்பற்ற சூழல் தொடராமல் இருக்க, தெற்கு ரயில்வே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்  என்பதே ஒட்டு மொத்த பயணிகளின் எதிர்பார்ப்பு.

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

1541 views

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

7337 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4832 views

பிற செய்திகள்

சந்திரகிரகணம் - காண திரண்ட மக்கள் : பிர்லா கோளரங்கில் சிறப்பு ஏற்பாடு

சந்திரகிரகணத்தை ஒட்டி, சென்னை பிர்லா கோளரங்களில் சந்திரகிரகண காட்சிகளைக் காண ஏராளமானோர் திரண்டுள்ளனர்.

91 views

ராஜகோபால் தனியார் மருத்துவமனை​யில் அனுமதி - வடபழனி தனியார் மருத்துவமனையில் ராஜகோபாலுக்கு சிகிச்சை

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சரவண பவன் உரிமையாளர் ராஜகோபால் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

13 views

"குழந்தையை கடத்தியதற்கான காரணம் தெரியவில்லை" - முருகன், டி.எஸ்.பி.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மாயமான 3 வயது குழந்தை, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

59 views

தபால்துறை தேர்வு ரத்து : பிரதமர் மோடி மற்றும் ரவிசங்கர் பிரசாத் அவர்களுக்கு தமிழக மக்கள் சார்பில் நன்றி - திருச்சி சிவா

மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தின் அறிவிப்புக்கு திருச்சி சிவா நன்றி தெரிவித்து கொண்டார்.

12 views

"தமிழக அரசால் நீட் தேர்வுக்கு விலக்கு பெற முடியவில்லை - "டி.டி.வி.தினகரன்

மத்திய அரசோடு சுமூக உறவு வைத்திருப்பதாக கூறும் தமிழக அரசால் நீட் தேர்வுக்கு விலக்கு பெற முடியவில்லை என்று அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

16 views

வனப்பகுதியில் இருந்து வழிதவறி சென்ற பெண் புள்ளிமான் - மானை மீட்டு சிகிச்சை அளித்து வரும் வனத்துறை

கோபிசெட்டிபாளையம் பகுதியில் கம்பிவேலியில் சிக்கித்தவித்த பெண் புள்ளி மானை வனத்துறையினர் மீட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.