தண்ணீர் பற்றாக்குறை உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை : ஆசிரியர் சங்க செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
பதிவு : ஜூன் 16, 2019, 09:42 PM
தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.
தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. மாநில தலைவர் மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு தேவையான தண்ணீர் இருப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் தேவையான அளவு தண்ணீர் இல்லாத பள்ளிகளுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மும்மொழி கல்வி திட்டத்தை ரத்து செய்துவிட்டு இரு மொழிக் கல்வி திட்டதையே நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல தீர்மனங்களும் நிறைவேற்றப்பட்டது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.