கோவையில் செயின் பறிப்பு போன்ற சம்பவங்களில் ஈடுபட்ட கும்பல் கைது
பதிவு : ஜூன் 14, 2019, 02:23 PM
கோவையில் நகை கொள்ளை செயின் பறிப்பு போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கும்பலை போலீசார் கைது செய்தனர்.
கோவை அருகே உள்ள பேரூர் போஸ்டல் காலனியை சேர்ந்த ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர் ராஜகோபால் என்பவரது வீட்டில் கடந்த மாதம் 26-ம் தேதி 80 சவரன் நகை மற்றும் ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இதேபோல் கடந்த 2-ம் தேதி சந்திர புஷ்பம் என்பவரின் 6 பவுன் செயினை மர்ம நபர்கள் பறித்து சென்றனர். இந்த இரு சம்பவங்கள் குறித்தும் வழக்கு பதிவு செய்த போலீசார் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர். வழக்கில் தொடர்புடைய  கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த 4 பேரை பிடித்து விசாரணை நடத்தியதில், 6 பேர் கொண்ட கும்பல் இதுபோல் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து அந்த 6 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து ஒரு கார் 50 பவுன் நகை, 1 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர்   6 பேரையும் நீதிமன்றத்தில் அஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

பேக்கரியின் கூரையை உடைத்து பணம், தங்கக்காசு கொள்ளை

புதுச்சேரியில் பேக்கரியின் மேற்கூரையை உடைத்து, 5லட்சத்து 80 ஆயிரம் பணம் மற்றும் தங்க காசுகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

71 views

மூதாட்டிகளை குறிவைத்து திருடும் பெண் கும்பல் கைது

மூதாட்டிகளை குறிவைத்து நகைகளை திருடி வந்த மதுரையைச் சேர்ந்த பெண் கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

171 views

பிற செய்திகள்

பள்ளிக்கு சென்ற அக்கா, தம்பி கடத்தல் - இருசக்கர வாகனத்தில் கடத்திய இளைஞன் கைது

பள்ளிக்கு சென்ற அக்கா தம்பி இருவரையும் இருசக்கர வாகனத்தில் வைத்து கடத்தி சென்ற இளைஞனை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

0 views

தனியார் வங்கியில் ரூ.1.16 கோடி மதிப்புள்ள நகைகள் மாயமான சம்பவம் - தனியார் வங்கி முதுநிலை மேலாளர் உள்பட 7 பேர் கைது

திருவண்ணாமலையில் இயங்கிவரும் பிரபல தனியார் வங்கியில் நகைகள் மாயமான விவகாரத்தில் வங்கியின் முதுநிலை மேலாளர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

8 views

ரவிச்சந்திரனுக்கு ஒரு மாத சாதாரண விடுப்பு வழங்க கோரிய வழக்கு - சிறைத்துறை கூடுதல் ஐ.ஜி. பதில் அளிக்க உத்தரவு

ரவிச்சந்திரனுக்கு ஒரு மாத சாதாரண விடுப்பு வழங்க கோரிய வழக்கில் தமிழக சிறைத்துறையின் கூடுதல் காவல்துறை தலைவர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது

13 views

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 போட்டித் தேர்வு - 6491 காலி இடங்களுக்கு செப்., 1 ஆம்தேதி தேர்வு

வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி நடைபெறும் குரூப்-4 தேர்வை 16.30 லட்சத்திற்கும் அதிகமானோர் எழுத உள்ளதாக தமிழக அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

46 views

ஜெயிலா? பெயிலா? என்பது நீதிமன்றத்தின் கையில் - சிதம்பரம் கைது குறித்து இல.கணேசன் கருத்து

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைதாகும் போது மட்டும் பேசுபவர்கள், 26 முறை ஜாமீன் வழங்கும்போது பேசாமல் இருந்த‌து ஏன் என பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

40 views

"கழிவுநீர் கட்டமைப்பை மேம்படுத்த ரூ.2,371 கோடி" - அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

சென்னை மாநகரில், கழிவுநீர் உட்கட்டமைப்பை மேம்படுத்த, 2 ஆயிரத்து 371 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசாணை வெளியிட்டுள்ளது.

44 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.