கடலூர் துறைமுகத்தில் படகுகளை நிறுத்தி மீனவர்கள் மறியல் : ஏராளமான போலீஸ் குவிப்பு
பதிவு : ஜூன் 14, 2019, 02:01 PM
கடலூர் மீன்பிடி துறைமுகத்தில் நடைபெற்று வரும் மறியல் காரணமாக மீனவர்களிடையே மோதல் ஏற்படும் நிலை உருவாகியுள்ளதால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கடலூர் துறைமுகத்திற்கு லாரிகள் மூலம் கொண்டு செல்லப்பட்ட சுருக்கு மடி வலைகளை போலீசார் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்தனர். லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுருக்குமடி வலை ஆதரவு மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை கடலூர் துறைமுகத்தில் இருந்து கடலுக்கு செல்லும் வழியில் படகுகளை நிறுத்தி அவர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் நாட்டு படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியவில்லை. மேலும் கடலுக்கு சென்ற சில மீனவர்களும் கரை திரும்ப முடியவில்லை. இதன் காரணமாக மீனவர்கள் இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சுருக்குமடி வலைகள் பயன்படுத்துவதாக தொடர்பாக கடலூர் மீனவர்களிடையே இருவேறு நிலை உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

3338 views

ஆயிரம் மாணவிகள் ஆலமரம் வடிவில் அமர்ந்து சாதனை

உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தையொட்டி செங்குன்றம் அரசினர் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், ஆலமரம் வடிவில் அமர்ந்து உலக சாதனை படைத்தனர்.

437 views

திராவிட இயக்கம் வளர்த்த தமிழ் நூல் வெளியீட்டு விழா

பேராசிரியர் மு.பி. பாலசுப்ரமணியன் எழுதிய திராவிட இயக்கம் வளர்த்த தமிழ் நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

46 views

பிற செய்திகள்

சென்னை திருவொற்றியூர் சுற்றுவட்டார பகுதிகளில் மாலைவேளையில் கொட்டித்தீர்த்த கனமழை

சென்னை திருவொற்றியூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை இடி மின்னலுடன் கனமழை பெய்தது.

7 views

காங். கட்சி சார்பில் குளத்தை தூர்வாரும் பணிக்கு 2 மாத சம்பளத்தை வழங்கிய ஜோதிமணி எம்.பி

களுத்தரிக்கப்பட்டி கிராமத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் தூர்வாரப்பட்ட குளத்தை பார்வையிட்ட ஜோதிமணி எம்.பி, பின்னர் அங்குள்ள மரக்கிளையில் அமர்ந்து சிறுவர்களுடன் விளையாடினார்.

15 views

முன்னாள் ம​த்திய அமைச்சர் ப. சிதம்பரம் பற்றி அவரது பிறந்த ஊர் பேசுவது என்ன?

மொரார்ஜி தேசாய்க்கு அடுத்தபடியாக அதிக முறை பட்ஜெட் தாக்கல் செய்த முன்னாள் ம​த்திய அமைச்சர் ப.சிதம்பரம் பற்றி அவரது பிறந்த ஊர் பேசுவது என்ன? ஊர் சொல்லும் சேதி பகுதியில் இன்று சிதம்பரம்.

1618 views

விளம்பர பதாகைகள் மக்களின் வெறுப்புக்கு பயன்படுகிறது - ஸ்டாலின்

தி.மு.க. முப்பெரும் விழாவில் தனது கட்டளையை ஏற்று பேனர்கள் வைப்பது முற்றிலும் தவிர்க்கப்பட்டிருப்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

24 views

விண்வெளியில் வீடு கட்டி தருகிறோம் என திமுகவினர் சொல்வார்கள் - ஆர்.பி. உதயகுமார்

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியில் அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா கூட்டம் நடைபெற்றது.

19 views

"3 ஆண்டுக்கு 5,8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வில் விலக்கு" - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

அண்ணாவின் பிறந்த நாள் விழாவையொட்டி அ.தி.மு.க. சார்பில், பொதுக்கூட்டம் மாவட்ட செயலாளர் நடைபெற்றது

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.