கள்ளக்குறிச்சி அருகே அந்தோணியார் ஆலய திருவிழா : திரளானோர் பங்கேற்பு
பதிவு : ஜூன் 14, 2019, 09:41 AM
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள மேல் நாரியப்பனூரில் அந்தோணியார் ஆலய திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள மேல் நாரியப்பனூரில், அந்தோணியார் ஆலய திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. காலையில் சிறப்பு திருப்பலியுடன் தொடங்கிய இவ்விழாவில், பின்னர் ஆடம்பர தேர்பவனி இரவில் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு, அந்தோணியாரை வழிபாடு செய்தனர்.

திருநள்ளாறு கோவில் பிரம்மோற்சவ விழா :காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வர சுவாமி கோவில் பிரம்மோற்சவ விழாவையோட்டி சனீஸ்வரபகவான் தங்க காக வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கடந்த மாதம் 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கிய நிலையில், தினந்தோறும் சுவாமி வீதியுலா, ஆடம்பர தேர்த்திருவிழா நடைபெற்று வந்தன. இவ்விழாவின் ஒரு பகுதியாக சனீஸ்வர பகவான் சிறப்பு அலங்காரத்துடன் தங்க காக வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.