ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் ரஷ்ய - சீன அதிபர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு
பதிவு : ஜூன் 14, 2019, 09:12 AM
கிர்கிஸ்தானில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி அங்கு ரஷ்ய,சீன அதிபர்களை சந்தித்து பேசினார்
கிர்கிஸ்தானில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, அங்கு ரஷ்ய,  சீன அதிபர்களை சந்தித்து பேசினார். கிர்கிஸ்தான் நாட்டின் தலைநகர் பிஷ்கேக் நகரில்,19 - வது ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு  நடைபெற்று வருகிறது.அதில், பங்கேற்பதற்காக கிர்கிஸ்தான் சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேசினார்.அப்போது, தீவிரவாதத்திற்கு எதிராக உறுதியான எடுக்குமாறு பாகிஸ்தானை வலியுறுத்துமாறு, சீன அதிபரிடம், பிரதமர் மோடி வலியுறுத்தினார்.இதையடுத்து, ரஷ்ய அதிபர் புதினை சந்தித்த பிரதமர் மோடி, அமேதி தொகுதியில் துப்பாக்கி தொழிற்சாலை அமைய ஆதரவு அளித்தமைக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். அப்போது, செப்டம்பரில் நடைபெறும் பொருளாதார மாநாட்டில் பங்கேற்க ரஷ்யா வருமாறு, மோடிக்கு புதின் அழைப்பு விடுத்தார்.அதை, மோடி ஏற்றுக் கொண்டார்.இந்நிலையில், இன்று ஈரான் அதிபர் ஹசன் ரொகானியை  பிரதமர் மோடி சந்தித்து பேச இருக்கிறார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.