விண்வெளியில் சொந்தமாக ஆய்வு மையம் அமைக்க இந்தியா திட்டம் : இஸ்ரோ தலைவர் சிவன்
பதிவு : ஜூன் 14, 2019, 09:07 AM
விண்வெளியில் சொந்தமாக ஆய்வு மையம் அமைக்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
இந்தியா வரும் 2022 ஆண்டு விண்ணுக்கு மனிதர்களை அனுப்ப திட்டமிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திரசிங் தெரிவித்துள்ளார். நாட்டின் 75 வது சுதந்திர தினத்தையொட்டி விண்ணுக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியில் இஸ்ரோ தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். ககன்யான் என்ற இத்திட்டத்தின் மூலம்  மனிதர்கள் விண்ணுக்கு அனுப்பி வைக்க திட்டமிடப்படுள்ளதாகவும் , இதற்கான பணிகளை தேசிய ஆலோசனை குழு  கண்காணித்து வருவதாகவும் அவர் கூறினார். பின்னர் பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், மக்களுக்கு பயனளிக்கும் வகையில் அறிவியல் தொழில்நுட்ப  திட்டங்களை இஸ்ரோ செயல்படுத்தி வருவதாக கூறினார். விண்வெளியில் சொந்தமாக ஆய்வு மையம் அமைக்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.நிலவை ஆய்வு செய்யும் சந்திராயன் 2  விண்கலம் திட்டமிட்டபடி அடுத்த மாதம் 15 ந்தேதி  விண்ணில் செலுத்தப்படும் என்றும் சிவன் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

திராவிட இயக்கம் வளர்த்த தமிழ் நூல் வெளியீட்டு விழா

பேராசிரியர் மு.பி. பாலசுப்ரமணியன் எழுதிய திராவிட இயக்கம் வளர்த்த தமிழ் நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

104 views

பிற செய்திகள்

உத்தரப்பிரதேசத்தில் தொடரும் கனமழை : கங்கை, யமுனையில் வெள்ளப் பெருக்கு

உத்தரப்பிரதேச மாநிலம் பிரக்யாராஜில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழை வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

0 views

ஆந்திர உயர்நீதிமன்ற வளாகத்துக்குள் புகுந்த மழைநீர் : கோப்புகளை பத்திரப்படுத்தும் பணியில் நீதிமன்ற ஊழியர்கள்

ஆந்திர மாநில தலைநகர் அமராவதியில் உள்ள அம்மாநில உயர்நீதிமன்ற கட்டடத்தில் தொடர் மழை காரணமாக நீர்க்கசிவு ஏற்பட்டுள்ளது.

1 views

அயோத்தி வழக்கு : நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய பேராசிரியர்

அயோத்தி வழக்கில் முஸ்லிம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவானுக்கு மிரட்டல் விடுத்த சென்னை பேராசிரியர் சண்முகம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.

40 views

தொடரும் வேலைநிறுத்தம் : பணிமனையில் நிற்கும் புதுச்சேரி அரசு பேருந்துகள்

நிலுவையில் உள்ள ஊதியம், போனஸ் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 3வது நாளாக புதுச்சேரி அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

6 views

கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைப்பு

கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பருவமழை குறைந்ததால் கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளுக்குநீர் வரத்து குறைந்துள்ளது.

13 views

தேஜஸ் போர் விமானத்தில் ராஜ்நாத் சிங் பயணித்தார்

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேஜஸ் போர் விமானத்தில் பயணித்தார்.

27 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.